மாணவர்களை சென்றடைவோம் .....
கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக அகத்தீ தாம்பரத்தை கடந்து தனது பணிகளை விரிவாக்கும் விதமாக பறந்து பட்ட மாணவர்களை சென்றடைய ஒரு முயற்சியாக கடந்த மாதம் ஜனவரி 30,31 தேதிகளில் வி ஐ டி சென்னை வளாகத்தில் நடந்த சர்வதேச ரோபோடிக்கா நிகழ்ச்சியில் பங்கெடுத்தோம்.
முற்றிலும் புதிய அனுபவமாக இருந்த இந்த நிகழ்வில் அகத்தீயுனுடைய கடந்த கால செயல்பாடுகளை புகைப்படங்களாக வைத்து காட்சிப்படுத்தினோம். அதேபோல் சென்னை காலநிலை செயல்பாட்டு குழுவுடன் Chennai Climate Action Group இணைந்து கழிவில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தில் ஏற்படும் விளைவுகளை விளக்கும்விதமாக புகைப்பட கண்காட்சிகளையும் வைத்தோம்.
மாணவர்களுக்கு இலவசமாக விதைப்பந்து வழங்கினோம்.
பூக்களைத் Perumal Theerthavadivel தேடி தேனீக்கள் மொய்ப்பதை போல மாணவர்களை வெகுவாக ஈர்த்த ஒன்றாக பண்டைய ஒலைச்சுவடிகளை போல, பனை ஓலையில் அவர்களின் விருப்பப்பட்ட பெயர்களை லேசர் தொழில்நுட்பம் கொண்டு அச்சிட்டும், எழுத்தாணி மூலமாக எழுதியும் கொடுத்தோம். எதிர்பார்த்ததை விட பெரிய வரவேற்பு இருந்தது. இதை ஒரு வாய்ப்பாக எடுத்து பனை மரத்திற்கும் தமிழ் மொழிக்கும் உள்ள தொடர்புகளையும் நவீன தொழில்நுட்பத்தை இயற்கையை மையமாக வைத்த நிலைத்த பொருளாதாரத்திற்கான வாய்ப்பாக மாற்றுவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த நல்ல வாய்ப்பாக இருந்தது.
பூவினி நவிலினி நல்ல உணவு வந்திருந்த மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதுவரை சுவைக்காத நம் பாரம்பரிய உணவின் சுவையை அறிமுகப்படுத்தினர்.
சூழலியல் கல்விக்கான ஒரு முன்னெடுப்பாக கீழ்கண்ட தலைப்புகளில் பள்ளிகூடங்களில் நிகழ்வுகளை நடத்த இருக்கிறோம். விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
*Eco trip*
1.Bird watch & Lake tour
2 Wetland tour & Shore walk
3. Model farms
4. Easy treak & tree walk
5. Historical trip
*Environmental Awareness session*
1 Waste to Energy / Global plastic treaty
2 Solid waste management - Journey of trash
3 Virtual water
4 Global warming
5. Books for children on environment
*Hands on Activity on Environment*
1. Seed ball making
2. Palm leaf printing
3. Coconut Shell crafting
4. Origami
5. Repair workshop
6. Bioenzymes
7. Kitchen garden
8. Sound healing session
9.Theater workshop
10. Scrap to Art
அகத்தீ
இயற்கைக்கு திரும்பும் பாதை
Comments
Post a Comment