Skip to main content

Posts

Showing posts from August, 2020

அகத்தீ - சிறார்களம் குழந்தைகளுக்கான ஆண்டு ஒன்று கூடுகை

  நேற்றைய சிறார்களத்தில் சிறார் களம் ------------------ ஓடியாடி விளையாட விரும்பும் குழந்தைகளின் ஆசைகளில் மண்ணை அள்ளிப் போட்டது போல் இந்த ஊரடங்கு தடை மிகப்பெரிய அளவிற்கு மன அழுத்தத்தை கொடுத்துள்ளது என்றால் மிகையல்ல. இன்று பள்ளிக்கூடம் வகுப்புகள் எல்லாம் கைபேசியிலும் கணினியிலும் மாறியுள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக இவைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று விரும்பினோம் ஆனால் அதுவே இன்று அவர்கள் வாழ்க்கையாக திணிக்கப்பட்டுள்ளது. அன்பின் மீது ஒரு சமூகத்தை கட்டமைக்க குழந்தைகளே நமக்கான ஒரே நம்பிக்கை. எவ்வளவு பெரிய கொடிய நோயையும் இயற்கை மீதான சக உயிர்கள் மீதான அன்பு வெல்லும் ! நேற்று அகத்தியில் குழந்தைகளுக்கான ஒன்று கூடுகை நடந்தது. இந்த ஆண்டு சிறிய அளவிலேயே செய்ய நேர்ந்தாலும் எப்பொழுதும்போல் பெரிய அளவில் மன நிறைவு அனைவருக்கும். கதைக்களமும் பாட்டில் ஓவியங்களுடன் இந்த ஆண்டு குழந்தைகளுக்காக தன் வாழ்க்கையை அற்பணித்த மரியா மாண்டிசோரியின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி குழந்தைகளும் பெற்றோர்களும் காய்கறி செடிகளை நட்டார்கள். வண்ணங்களை போல அழகாக குழந்தைகளை வழிநடத்திய ஸ்ரீமதிக்கும், உயிரோட்டமா...

அகத்தீ - சிறார்களம் - நிகழ்வில் நாம் யானைகளை பற்றி அறியலாம்...!

  *வணக்கம் மக்களே* *சிறார் களம்* இந்த வார நிகழ்வில் யானைகளை பற்றி பார்க்க இருக்கிறோம். யானைகள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினங்கள் என்று நம் எல்லோருக்கும் தெரியும். யானைகள் இப்பூவுலவில் வாழும் பிற விலங்குகளில் இருந்து பல உருவத்தில் மட்டுமல்லாது, பல்வேறு குணங்களிலும் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. யானைகள் நம்மில் பலரை ஆச்சரியப்படுத்துவதை தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். இந்த அழகிய, அறிவார்ந்த மற்றும் அமைதியான விலங்குகள் பற்றி இந்த வாரம் *சிறார்* *களம்* நிகழ்வில் *கதைச்சொல்லி தோழர். வித்யா* அவர்களுடன் சந்திப்போம். https://forms.gle/W3LUvDdF17bZGsM49 நிகழ்வில் பங்கு பெற Google form ல் தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளவும். 23.08.2020 மாலை.06.00 மணிக்கு ஞாயிற்றுக்கிழமை.

அகத்தீ - சிறார்களம் - பனை மரத்தினை பற்றிய தகவல்கள்

  வணக்கம் மக்களே... *"தினைத்துணை நன்றி செயினும்* *பனைத்துனையாய்* *கொள்வார் பயன்தெரி வார்"* இந்த வாரம் சிறார் களம் நிகழ்வில். நாம் நம் மாநில மரமான பனை மரத்தினை பற்றி பல தகவல்களை கூற இருக்கிறோம். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். - பனை பற்றிய: - கதையும் - கலையும் - விடுகதைகளும் உள்ளடங்கிய நிகழ்வுகள் நடக்க உள்ளது கண்டிப்பாக இந்த நிகழ்வில் உங்கள் குழந்தைகளுடன் பங்கேற்குமாறு அன்போடு அழைக்கிறோம். தேதி: 16-8-2020 நேரம்: 4pm குழந்தைகள் அனைவரும் 10 நிமிடம் முன்னதாக (3:50pm) உள்ளீடு செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். Google meet செயலியில் நடைபெற உள்ளது முன்னதாக நீங்கள் Google form படிவத்தை பூர்த்தி செய்து தங்கள் வருகையை உறுதி‌ செய்யவும் https://forms.gle/BqtfoM1DW2VA9dEEA

அகத்தீ - அகத்தியில் சுதந்திர தின சிறப்பு சந்திப்பு

  விடுதலை தற்சார்பில் இருந்து பிறக்கிறது.நேற்று அகத்தியில் சுதந்திர தின சிறப்பு சந்திப்பு.

அகத்தீ - சிறார்களம் - கால்நடை வளர்ப்பு பற்றியும் அதன் பயன்பாடு பற்றிய நிகழ்வு

  சிறார் களம் *நடமாடும் செல்வங்களாம்* *பாரம்பரிய கால்நடை செல்வங்களாம்* *நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மையான செல்வங்கள்* *விவசாயம் தழைத்தோங்க துணையான செல்வங்கள்* இந்த வாரம் நடக்கவிருக்கும் சிறார்களம் நிகழ்வில்: கால்நடை வளர்ப்பு பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் - செய்முறை விளக்க நேரலை நிகழ்வும் - கதையும் - கலையும் - விடுகதைகளும் உள்ளடங்கிய நிகழ்வுகள் நடக்க உள்ளது கண்டிப்பாக இந்த நிகழ்வில் உங்கள் குழந்தைகளுடன் பங்கேற்குமாறு அன்போடு அழைக்கிறோம். தேதி: 09 -08 -2020 நேரம்: 4 pm Google meet செயலியில் நடைபெற உள்ளது இந்நிகழ்வில் கலந்து கொள்வோர் கட்டாயம் முன்பதிவு செய்து கொள்ளுங்கள். முன்பதிவு செய்தவர்களை சிறார்களம் புலனக் (whatsapp) குழுவில் இணைத்து விடுவோம். அக்குழுவில் நிகழ்விற்குண்டான google meet id பகிரப்படும். முன்பதிவு செய்வதற்கான படிவம் https://forms.gle/WjiPRiKVo7VoX9Lz8

அகத்தீ - சிறார்க்களம் நிகழ்விற்கான அழைப்பு

  வணக்கம் மக்களே... கடந்த ஐந்து வாரங்களாக சிறார்க்களம் என்ற பெயரில் குழந்தைகளுக்கான நிகழ்வை தொடர்ச்சியாக இணையத்தில் நடத்தி வருகிறோம்.. கதை கலைகள் விடுகதைகள் என சில சுவாரசியமான விஷயங்களை உள்ளடக்கி இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த வாரம் நடக்கவிருக்கும் சிறார்களம் நிகழ்வில் சற்று கூடுதல் கவனம் செலுத்த விரும்புகிறோம். குறிப்பாக குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றியும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை (EIA) 2020 பற்றியும் குழந்தைகளிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி இந்த நிகழ்வை அதற்கு ஏற்ப குழந்தைகளின் தன்மையில் வடிவமைத்திருக்கிறோம். கண்டிப்பாக இந்த நிகழ்வில் உங்கள் குழந்தைகளுடன் பங்கேற்குமாறு அன்போடு அழைக்கிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள google registration https://docs.google.com/.../1FAIpQLSe1qd4tZgU.../viewform... லிங்க் மூலம் நிகழ்வுக்கு முன் பதிவு செய்வது அவசியம். நீங்கள் முன் பதிவு செய்த பின் சிறார்களம் குழுவில் உங்களை இணைத்து விடுவோம், அதில் கூடுதல் தகவல்களையும் நிகழ்வின் தன்மை குறித்தும் நீங்கள் மேலும் அறிந்து கொள்ளலாம். நாள் - 02.08.2020 நேரம் - 4.00 - 5.30 pm Google...