நேற்றைய சிறார்களத்தில்
சிறார் களம்
------------------
ஓடியாடி விளையாட விரும்பும் குழந்தைகளின் ஆசைகளில் மண்ணை அள்ளிப் போட்டது போல் இந்த ஊரடங்கு தடை மிகப்பெரிய அளவிற்கு மன அழுத்தத்தை கொடுத்துள்ளது என்றால் மிகையல்ல. இன்று பள்ளிக்கூடம் வகுப்புகள் எல்லாம் கைபேசியிலும் கணினியிலும் மாறியுள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக இவைகளிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று விரும்பினோம் ஆனால் அதுவே இன்று அவர்கள் வாழ்க்கையாக திணிக்கப்பட்டுள்ளது.
அன்பின் மீது ஒரு சமூகத்தை கட்டமைக்க குழந்தைகளே நமக்கான ஒரே நம்பிக்கை. எவ்வளவு பெரிய கொடிய நோயையும் இயற்கை மீதான சக உயிர்கள் மீதான அன்பு வெல்லும் !
நேற்று அகத்தியில் குழந்தைகளுக்கான ஒன்று கூடுகை நடந்தது. இந்த ஆண்டு சிறிய அளவிலேயே செய்ய நேர்ந்தாலும் எப்பொழுதும்போல் பெரிய அளவில் மன நிறைவு அனைவருக்கும்.
கதைக்களமும் பாட்டில் ஓவியங்களுடன் இந்த ஆண்டு குழந்தைகளுக்காக தன் வாழ்க்கையை அற்பணித்த மரியா மாண்டிசோரியின் 150-ஆவது பிறந்த நாளையொட்டி குழந்தைகளும் பெற்றோர்களும் காய்கறி செடிகளை நட்டார்கள்.
வண்ணங்களை போல அழகாக குழந்தைகளை வழிநடத்திய ஸ்ரீமதிக்கும், உயிரோட்டமாக கதைகளை சொன்ன ரேகாவுக்கும் எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தாம்பரம் அகத்தி !
அகத்தி மகிழ்ச்சி !
Comments
Post a Comment