Skip to main content

Posts

Showing posts from March, 2023

அகத்தீ ஒடுக்கப் பட்டோருக்கான நாடக வடிவம் - அறிமுகமும் பயிற்சியும் அனுபவ பதிவு

அகத் தீ   TO ஒடுக்கப் பட்டோருக்கான நாடக வடிவம் - அறிமுகமும் பயிற்சியும் அனுபவ பதிவு 18/03/23, சனிக்கிழமை, தாம்பரம் Theatre of Oppressed - உபதேச நாடக வடிவமாக இல்லாமல் பார்வையாளர்களை பங்கெடுக்க வைக்கும் நாடக வடிவம் இது. இதுபோன்ற பயணங்களில் / பயிற்சிகளில் பங்கெடுக்க ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் இணைப்பில் இணையவும். https://chat.whatsapp.com/JW1uXNaE91QED9TC5oWoKl ________________ மக்களே, இன்றைய நாள் நிறைவா போச்சு. ஒரு பங்கேற்பாளராக இருந்து இப்போது நெறியாளராக மாறியது தன்னம்பிக்கையை கொடுத்தது. நம்மாள் செய்ய முடியும் என்று ஒரு உறுதியை கொடுத்தது. ரேஷ்மா தோழர், காஞ்சனா தோழர், வித்யா, கோமதி (women's gang ) என எல்லாரும் சுற்றுகளில் நெறி படுத்தினோம். விளையாட்டு குழைந்தைகளுடன் இணைந்தும், மற்ற activities பெரியவர்கள் மட்டும் செய்தோம். புதிதாக மோஹன் என்ற கதை சொல்லி நம்மோடு இணைந்தார். எனக்கு தனிப்பட்ட விதத்தில் ஒரு தயக்கம் இறந்தது. அவருக்கு convincing ஆ இந்த நாள கொண்டு போக முடியுமா அப்படின்னு. imperfections யினை இயல்பாக ஏற்றுக்கொண்டார். முழுவதும் பங்காக இருந்தார். அவரும்...

அகத்தீ ஒரு நாள் சூழலியல் பயணம்

  அகத் தீ ஒரு நாள் சூழலியல் பயணம் (11/03/23) கூட்டு விவசாய நிலம் வாங்குவதற்கான தேடல்... மாதிரி பண்ணை... இளம் இயற்கை விவசாயினுடைய வாழ்க்கை பயணம்.... அவர் விளைவித்த பொன்னியும், சீரக சம்பா அரிசியும் வாங்கிக் கொண்டு வந்தது... ஒவ்வொருவரும் இயற்கைக்கு நெருக்கமாக தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்கியதின் அனுபவ பகிர்வு... சமூகமாக நாம் இயங்க வேண்டியதின் தேவை பற்றிய உரையாடல்... இதுபோன்ற பயணங்களில் பங்கெடுக்க ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் இணைப்பில் இணையவும். https://chat.whatsapp.com/JW1uXNaE91QED9TC5oWoKl

அகத்தீ குடும்பங்களின் ஒன்று கூடல் & ஒரு நாள் சூழலியல் பயணம் திட்டமிடல்

அகத்தி குடும்பங்களின் ஒன்று கூடல் (05/03/23) & ஒரு நாள் சூழலியல் பயணம் திட்டமிடல் (11/05/23) • TO நாடக பயிற்சிக்கான சந்திப்பை இந்த மாதம் உறுதிப்படுத்துவது. சிட்லபாக்கம் ஏரி திருவிழாவை முன்னிட்டு நாடகங்கள் போடுவது • மாதிரி பண்ணைகளுக்கு சென்று வருவதும், இயற்கை விவசாயிகளை சந்திப்பதும், ஊர் திரும்பியவர்களுடன் உரையாடுவதையும் தற்சார்பு வாழ்வியல் ஒட்டிய நம் கூட்டு புரிதலை ஆழப் படுத்துவதையும் கவனமாக அதிகரிப்பது. "அன்னம் ஆர்கானிக்" சுபா அவர்களின் தந்தை நெஞ்சிலா வேளாண்மை ஒட்டிய அவரின் பத்தாண்டு பயணத்தை சுருக்கமாக பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல் அவர் பண்ணைக்கும் அழைப்பு கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது. • சமீபத்தில் நடக்கும் இளம் வயது உடையவர்களின் திடீர் இறப்பு ஒரு பெரிய அதிர்ச்சியையும் எச்சரிக்கையும் ஏற்படுத்துகிறது. ஒரு சமூகமாக நாம் என்னவெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், ஒருவருக்கொருவர் எப்படி ஆதரவாகவும் நாம் குழுவாகவும் துணை நின்று உதவி செய்வது என்று உரையாடினோம். அகத்தி தோழன் நாகராஜ் அவர்களின் தம்பி வினோத்தின் திடீர் உடல் நல குறைவு, அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மருத்துவ சி...