அகத்தி குடும்பங்களின் ஒன்று கூடல் (05/03/23)
& ஒரு நாள் சூழலியல் பயணம் திட்டமிடல் (11/05/23)
• TO நாடக பயிற்சிக்கான சந்திப்பை இந்த மாதம் உறுதிப்படுத்துவது.
சிட்லபாக்கம் ஏரி திருவிழாவை முன்னிட்டு நாடகங்கள் போடுவது
• மாதிரி பண்ணைகளுக்கு சென்று வருவதும், இயற்கை விவசாயிகளை சந்திப்பதும், ஊர் திரும்பியவர்களுடன் உரையாடுவதையும் தற்சார்பு வாழ்வியல் ஒட்டிய நம் கூட்டு புரிதலை ஆழப் படுத்துவதையும் கவனமாக அதிகரிப்பது.
"அன்னம் ஆர்கானிக்" சுபா அவர்களின் தந்தை நெஞ்சிலா வேளாண்மை ஒட்டிய அவரின் பத்தாண்டு பயணத்தை சுருக்கமாக பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல் அவர் பண்ணைக்கும் அழைப்பு கொடுத்தது மகிழ்ச்சியாக இருந்தது.
• சமீபத்தில் நடக்கும் இளம் வயது உடையவர்களின் திடீர் இறப்பு ஒரு பெரிய அதிர்ச்சியையும் எச்சரிக்கையும் ஏற்படுத்துகிறது. ஒரு சமூகமாக நாம் என்னவெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், ஒருவருக்கொருவர் எப்படி ஆதரவாகவும் நாம் குழுவாகவும் துணை நின்று உதவி செய்வது என்று உரையாடினோம்.
அகத்தி தோழன் நாகராஜ் அவர்களின் தம்பி வினோத்தின் திடீர் உடல் நல குறைவு, அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மருத்துவ சிக்கல்களை பகிர்ந்து கொண்டதின் விளைவாக முதல் கட்டமாக வாரம் இருவர் வினோத்துடன் சில மணி நேரம் செலவு செய்வதற்கு சென்று வருவது என்று பேசப்பட்டது.
பேரன்பின் மீது ஒரு சமூகத்தை கட்டமைப்போம் !
- அகத்தீ
ஒரு நாள் சூழலியல் பயணம்
• மாதிரி விவசாய பண்ணைகள்.
• கூட்டு விவசாய நிலம் வாங்குவது மற்றும் ஊர் திரும்புதல் தொடர்பான உரையாடல்.
• இயற்கை விவசாயிகளோடு சந்திப்பு
அச்சரப்பாக்கம் சுற்று வட்டாரம்
11 மார்ச் 2023
காலை 8 மணிக்கு
தாம்பரத்தில் இருந்து வண்டி புறப்படும்.
ஒரு நபருக்கு பயண கட்டணம் ரூபாய் 700/- (மதிய உணவு சேர்த்து)
முன்பதிவு அவசியம் : பயண கட்டணம் செலுத்துவதின் மூலம் தங்கள் இருக்கை உறுதி செய்யப்படும்.
Comments
Post a Comment