காலநிலை மாற்றம் பற்றி மாணவர்களுடன் உரையாடல் பெருங்களத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் இரண்டாம் நாள் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் 27/9/25 பிற்பகல் மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை பற்றி அகத்தீக் குழு சார்பாக திரு. பாரதி கண்ணன் அவர்கள் சிறப்புரையாற்றினார். நிகழ்வின் முடிவில் உற்சாகமாக பங்கெடுத்த மாணவர்களுக்கு கொண்டு சென்ற புத்தகங்களை பரிசாக கொடுத்தோம். நாம் பேசிய எல்லாவற்றையும் பற்றி தெரிந்து வைத்திருந்த அறிவார்ந்த மாணவி ஜெஸ்ஸியை பார்த்தது ஆச்சரியமாக இருந்தது. ஆயிஷாவை நேரில் சந்தித்து விட்ட மகிழ்ச்சி. நூல்களை கொடுத்த பிறகு சுவாதி என்ற மாணவி "நான் ஒரு புத்தகப் புழு" என்று அறிமுகப்படுத்திக் கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. மாணவர்களுக்கு வாசிப்பு உலகத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எத்தனிப்பு மட்டுமே மிஞ்சுகிறது.