அகத்தீ
TO ஒடுக்கப் பட்டோருக்கான நாடக வடிவம் - அறிமுகமும் பயிற்சியும்
அனுபவ பதிவு
18/03/23, சனிக்கிழமை, தாம்பரம்
Theatre of Oppressed - உபதேச நாடக வடிவமாக இல்லாமல் பார்வையாளர்களை பங்கெடுக்க வைக்கும் நாடக வடிவம் இது.
இதுபோன்ற பயணங்களில் / பயிற்சிகளில் பங்கெடுக்க ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் இணைப்பில் இணையவும்.
________________
மக்களே, இன்றைய நாள் நிறைவா போச்சு. ஒரு பங்கேற்பாளராக இருந்து இப்போது நெறியாளராக மாறியது தன்னம்பிக்கையை கொடுத்தது. நம்மாள் செய்ய முடியும் என்று ஒரு உறுதியை கொடுத்தது. ரேஷ்மா தோழர், காஞ்சனா தோழர், வித்யா, கோமதி (women's gang
) என எல்லாரும் சுற்றுகளில் நெறி படுத்தினோம். விளையாட்டு குழைந்தைகளுடன் இணைந்தும், மற்ற activities பெரியவர்கள் மட்டும் செய்தோம். புதிதாக மோஹன் என்ற கதை சொல்லி நம்மோடு இணைந்தார். எனக்கு தனிப்பட்ட விதத்தில் ஒரு தயக்கம் இறந்தது. அவருக்கு convincing ஆ இந்த நாள கொண்டு போக முடியுமா அப்படின்னு. imperfections யினை இயல்பாக ஏற்றுக்கொண்டார். முழுவதும் பங்காக இருந்தார். அவரும் இந்த கலயோடும், நம்மோடும் பயணிக்க ஆர்வம் காட்டினார். இவரை ஏன் குறிப்பிட்டு சொல்கிறேன் என்றால், ஒரு practice செய்யும், பெரிதாக திட்டமில்லாத இந்த சூழலே உருப்படியா ஒருத்தருக்கு கடத்த முடியிறப்ப, நிச்சயம் இன்னும் செழுமை படுத்தின திட்டமிடல் இருந்தால் தூள் பன்லாம்.
Image drama மற்றும் ஒரு கதையை தேர்வு செய்து, 5 sequence வரை மட்டும் செய்தோம் மக்களே.
எல்லாம் இருந்தா நல்லா இருண்டுருக்கும்லன்னு சொல்லிட்டே இருந்தோம். ரொம்ப மிஸ் பண்ணோம் எல்லாத்தையும்.
நம்ம எல்லாரும் சேர்ந்து செய்றது ரொம்ப நல்லா இருக்கும் சரி தான். ஆனால் மற்ற ஊர்களில் இருக்கும் பட்சத்தில் ஆங்காகே தனி தனியாக இந்த முன்னெடுப்புகளை எடுத்து அவரவர் தனி பயிற்றுநர் ஆக உருவெடுக்க வேண்டும் என்பதை பற்றியும் பேசினோம்.. முடியிரப்ப கூடுவோம் என்று பேசினோம்.
அடுத்த கட்ட திட்டம்
- புதிய நபர்களை அடையாளப்படுத்தி ஒரு நாம் இணைந்து ஒரு பயிற்சியை கொடுப்பது
- நாம் சந்தித்து பயிற்சி எடுப்பது
- இது இரண்டிற்கும் அகத்தி இடம் இப்போதைக்கு தயாராக உள்ளது. (சில dos and don'ts நாம் கவனத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது)
- வாரம் சனிக்கிழமை இதற்கான நாளாக ஒதுக்க வேண்டும் என்று நினைத்தோம்
- வைஷ்ணவி
அருமையாக போனது, நான் எந்த தயக்கம் இல்லாமல் இன்டர்வென்ஷன் போனது எனக்கே வியப்பாக இருந்தது.T.O தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்ற உந்துதலை இந்த நாள் கொடுத்தது.
- காஞ்சனா
நேற்றைய TO கூடுகை சிறப்பாக இருந்தது விளையாடும் போதும் பயிற்சி பகிர்விற்கு போதும் வானகம் நாட்கள் நினைவுக்கு வந்தது அனைவரின் முகங்களும் எண்ணங்களில் வந்த வண்ணம் இருந்தது. மீண்டும் அதே குழுவை சந்திக்க நேர்ந்தால் மகிழ்ச்சி. புதிய முகம் மோகன் சிறப்பாக பங்கேற்றார். குறைந்த ஆட்கள் இருப்பினும் இருப்பவர்களை வைத்து என்ன சிறப்பாக செய்ய முடியுமோ செய்தோம். பாலமுரளி தோழருக்கு நன்றி நாள் முழுவதும் காட்சி பதிவிற்காக புகைபட கருவியை கையில் ஏந்திய வண்ணம் இருந்தார். இந்த கூடுதல் சிறப்பாக அமையப்பெற்றதற்கு அனைவருக்கும் நன்றி. 10 மணிக்கு முன்னதாகவே வந்து இடத்தை சுத்தப்படுத்தி வைஷ்ணவி, ரேஷ்மா, கோமதி மற்றும் ராம் தோழர்களுக்கு நன்றி.ச சிறந்த உணவு கொடுத்தமைக்கும் நன்றி. மீண்டும் சந்திப்போம் 



- வித்யா
Yesterday we had a great time....recollecting the concepts, playing games, gathering with the group, pot luck lunch, calling Arundathi, etc. Transition from being a participation to a facilitator was interesting. Our new member Mohan thozhar adapted and contributed so well. The above video is a glimpse of the story frame we enacted. The kids had a blast yesterday. Agathi is a wonderful space. It was so warm and spacious. Thanks to all the beautiful people who are giving us this space. Special thanks to Raja (doggy) who was so lovely with everyone. Looking forward to the future sessions.
- Reshma
மறதி மனிதனின் மிகப்பெரிய பலமும் பலவீனமும்.
வானகத்தில் நாம் மிகவும் ஆர்வமாக கற்றுக்கொண்ட TO நாடக பயிற்சியை மறந்துவிடாமல் அதை உயிர்ப்புடன் வைத்திருக்க நாம் சந்திப்பது அவசியம் என்பதை எல்லோரும் முன்னரே தெரிவித்ததையொட்டி கூட்டப்பட்டது
வரும் காலங்களில் பொது நிகழ்வுகளில் TO நாடகங்களை அரங்கேற்ற வாய்ப்புகள் உள்ளது. ஜூன் 4 சிட்லபாக்கம் ஏரி திருவிழாவில் நாடகம் போட நமக்கு அழைப்பு வந்துள்ளது.
ஒரு நாள் TO பயிற்சி இனி எல்லா வாரமும் சனிக்கிழமை
காலை 9:30 மணி முதல்
மாலை 5 மணி வரை
அகத்தி, தாம்பரம்
Comments
Post a Comment