Skip to main content

தமிழும் இயற்கையும் போட்டிக்கான வரவேற்பு அழைப்பு

 *அன்புடன் வரவேற்கிறோம்*

அகத்தீ சார்பாக, 'தமிழும் இயற்கையும்' என்ற தலைப்பில் வரும் சனவரி 24 சனிக்கிழமை, பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளை கிழக்கு தாம்பரம் கிறிஸ்து இராஜா நடுநிலைப் பள்ளியில் நாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
கடந்த பல ஆண்டுகளாக அகத்தீயின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்தும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நிகழ்வுகளில் பங்கெடுக்கவும் செய்த அனைவரையும் இத்தருணத்தில் அன்புடன் வரவேற்கின்றோம்.
📣 *நிகழ்வின் விபரங்கள்:*
- 🌿 *பங்கேற்பு:* 15க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கெடுக்கிறார்கள்
- 🏆 *போட்டிகள்:* பத்துக்கும் மேற்பட்ட போட்டிகள் ஒரே நாளில் நடத்தி அதற்கான சான்றிதழ்களையும் பரிசுகளையும் வழங்குகிறோம்
- 🍴 *உணவு:* ஆசிரியர்கள், நடுவர்கள், தன்னார்வலர்களுக்கான மதிய உணவு, பிற்பகல் மாணவர்களுக்கான சிற்றுண்டி என்று திட்டமிட்டுள்ளோம்
🙏 *உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்:*
- 👥 *பங்கேற்பு:* போட்டி நடுவராகவும், தன்னார்வலராகவும் பங்கெடுக்க உங்களுக்கு விருப்பம் இருக்குமாயின் அவசியம் எங்களை தொடர்பு கொண்டு நிகழ்வுக்கு வலுசேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- 💰 *நன்கொடை*
அடுத்த தலைமுறையிடம் தமிழ் மொழியின் வாயிலாக இயற்கையின் முக்கியத்துவத்தை கொண்டு செல்லும் இந்த நிகழ்விற்கான செலவுகள் திட்டமிட்டதை விட அதிகரித்துள்ளது. ஏதோ ஒரு வகையில் இக்குழுவில் உள்ள ஒவ்வொருவரின் பங்களிப்பும் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கும் எங்களை ஊக்குபடுத்தி தொடர்ச்சியாக செயல்படுவதற்கு வலு சேர்க்கும் என்று நம்புகிறோம்.
🌟 *மண் பயனுற வேண்டும்.*
பேரன்போடு....
அகத்தீ தாம்பரம்* 🌟
* GPay* : 9940220091


Comments