தகை - சதுரங்க பயிற்சி
கடந்த ஆண்டு அகத்தீயின் முன்னெடுப்பாக தகை சமூக கூடம் தொடங்கியதில் இருந்து ஏராளமான நிகழ்வுகளை ஒருங்கிணைத்தோம்.
அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு கோடை விடுமுறையை ஒட்டி சதுரங்க பயிற்றுனர் நண்பர் மணிகண்டனின் செல்வமணி சதுரங்க பயிற்சி மையம் மூலமாக சிறார்களுக்கான மூன்று நாள் சதுரங்க பயிற்சி சிறப்பாக நடைபெற்றது. சதுரங்க விளையாட்டின் வரலாறு, ஒவ்வொரு காயிகளுக்குமான மதிப்பு காய்களை எப்படி நகர்த்த வேண்டும் என்று எல்லாவற்றையும் பொறுமையாக குழந்தைகளின் மொழியில் அழகாக விளக்கி கற்றுக் கொடுத்தார்.
இந்த ஆண்டும் குழந்தைகளுக்கான சதுரங்க பயிற்சி கிழக்கு தாம்பரத்தில் திட்டமிட்டுள்ளோம் ஆர்வம் உள்ளவர்கள் இணையலாம்.
Comments
Post a Comment