Skip to main content

சிறார்களம் - தேன் கூடு, தேனீக்கள் பற்றிய நேரடி அறிமுகம்.....

 சிறார்களம்

வயல்ல தான் நெல்லு விளையுதுனு பாடப்புத்தகத்துல இருக்கும். நம்ம பள்ளிக் காலங்களில் அத நாலு சுவத்துக்குள்ள கரும்பலகையில தான் சொல்லி தருவாங்க.. ராக்கெட்டும் போர்டுல தான் வரையப்படும்,பறவையும் புத்தகத்தில் படமாகத்தான் காட்டுவாங்க.இதெல்லாம் தெரிஞ்சுக்குறது அறிவ வளர்த்துக்க இல்லை. வெறும் மதிப்பெண் வாங்க தான். மதிப்பெண் வாங்குரதுக்கான குதிரைகளாக பள்ளிக்கூடங்கள் நம் குழந்தைகளை உருவாக்கிக் கொண்டிருக்கு.
இந்த மாதிரி சூழலில் சிறார்களுக்கான களமாக தாம்பரத்தில் வாரம் வாரம் குழந்தைகளுக்கான ஒன்றுகூடல் நடந்துகொண்டிருக்கு. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை தேனிக்கள் குறித்த அறிமுக நிகழ்வு நடைபெற்றது. பாட்டுடனும் உரையாடலும் மட்டுமல்லாமல் தேனீயை நேரடியாக பார்க்கும் வாய்ப்பும் குழந்தைங்களுக்கு கிடைத்தது. வெறும் படங்களும் பாடப்புத்தகங்களும் தேனீக்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதை விட நேரடியாக பார்க்கும் போது குழந்தைகள் எளிதில் புரிந்துகொள்கிறார்கள்.
அகத்தி : 9940220091
















Comments