குழந்தைகள் உலகம் தொடர்பான பெரியவர்களுக்கான ஒன்று கூடல்
வடிச்சகஞ்சிய கொட்டியதாலோ, விளையாட்டா பேசும் போது சின்ன தவறு செய்திட்டாலோ அடி பயங்கரமா வாங்கிய தலைமுறை போன தலைமுறை. படிப்போட விளையாட்டுல தான் பெரிய நாட்டம். ஆனாலும் பிடிக்காத சைன் டீட்டாவையும்,காஷ் டீட்டாவையும் கட்டிக்கொண்டு அழனும். மார்க் குறஞ்சா வீட்டுல திட்டுவாங்கனும் பள்ளியில திட்டுவாங்கனும். நமக்கு பிடிச்ச விஷயத்தை விட்டுட்டு பிடிக்காத விஷயத்து பின்னாடி ஓடனும். இந்த பிரச்சனையெல்லாம் நம்மலோட போகட்டும் நம்ம பிள்ளைகளுக்கு வேணாம்னு நினைக்கிற தாம்பரம் பகுதியை சார்ந்த பேரன்பு கொண்ட சில பெற்றோர்களின் ஒன்று கூடுகையே இந்த சந்திப்பும் உரையாடலும்.
கடந்த புதன்கிழமை (10/08/22) நடந்த சந்திப்பு குழந்தைகளுக்கான உலகத்தை உருவாக்கி தர கடந்தகால நம் அனுபவங்களில் இருந்து ஒரு ஆக்கபூர்வமான உரையாடலை ஏற்படுத்தியது.
குழந்தைகளுக்கான சிறார்களம் இனி அனைத்து வாரங்களிலும் தாம்பரத்தில் தொடர்ந்து நடைபெறும். ஒரே இடத்தில் இல்லாமல் வெவ்வேறு இடங்களில் இனி நடைபெறும். குழந்தைகளோடு குழந்தையாக எல்லா பெற்றோரும் தயாராக இருங்க
Comments
Post a Comment