அகத்தீ-பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் : குழந்தை வளர்ப்பில் சமநிலை
கடந்த வாரம் சனிக்கிழமை ஜூன் 14 அன்று, அகத்தீ சார்பில் "குழந்தைகள் வளர்ப்பில் சமநிலை" என்ற தலைப்பில் நடந்த ஒன்று கூடலில் கலந்து கொண்டோம்.. தோழர் ஷைனி சாரா (குழந்தைகள் நல ஆலோசகர்) அவர்கள்,
மிகுந்த நிதானமாகவும், தற்கால வாழ்வியல் முறைகளுக்கு ஏற்றவாறும் குழந்தைகளை கையாள்வது எப்படி என்றும் எடுத்துரைத்தார்..
பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் குழந்தைகளோடு பேசவும் விளையாடவும் நேரத்தை பயன்படுத்துவது மிக முக்கியம். நாம் (பெற்றோர்) நினைத்தவாறு குழந்தைகள் நடந்து கொள்ள வேண்டும் என்பது முற்றிலும் இயல்பிற்கு முறனானது. பெற்றோர்கள் மிகுந்த பொறுமையுடனும், அன்புடனும் குழந்தைகளை கையாள்வதே அவர்களுடைய மன வளர்ச்சிக்கான வழி என்பதை புரிந்து கொண்டோம்.
நமது சூழ்நிலைக்கு ஏற்றவாரு அவர்களிடம் நாம் எதிர்பார்ப்பு வைக்காமல், குழந்தைகளின் உலகில் சென்று அவர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும், அவர்களிடம் எதிர்பார்ப்புகளை வைக்காமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அவர்களை தயார்படுத்துதல் மிக முக்கியம் என்பதையும் எடுத்துக் கொண்டு ஒன்றுகூடலிலிருந்து விடை பெற்றோம். - பானு சித்ரா Banu Chitra
___________
Balanced Parenting – சமநிலை பெற்றோராக இருப்பது
அன்பும் ஒழுக்கமும் சமமாக இருக்கும் ஒரு சமநிலை பெற்றோர்ப் பாணி தேவை.
அன்பும் கொடுக்க வேண்டும், எல்லைகளையும் அமைக்க வேண்டும்.
பேச விடுங்கள், ஆனால் வழிகாட்டவும் செய்யுங்கள்.
நண்பனாக இருங்கள், ஆனாலும் நெறிமுறைகளில் உறுதியாக இருங்கள்.
Children from balanced parenting learn:
Respect with reasoning
Obedience with understanding
Freedom with responsibility
பெற்றோராக நாம் சிறந்தவர்கள் ஆக வேண்டியதில்லை. ஆனால் அன்போடும் அறிவோடும் இருப்பது முக்கியம்.
Abbreviation of PARENTING
P – Patience (பொறுமை)
Build strong morals and empathy
A – Acceptance (ஏற்றுக்கொள்வது)
Accepting your child as they are, without judgment.
R – Respond, not React (மறுமொழி கொடு, எதிர்வினையாதே)
Respond with calmness, not with anger or impulse.
E – Encourage & Enhance (ஊக்கப்படுத்தல் மற்றும் மேம்பாடு)
Encourage their skills and help them grow.
N – Nourish (போஷிப்பது)
Nourish them emotionally, mentally, and physically.
T – Thankfulness (நன்றி உணர்வு)
Be grateful for the gift of parenting.
I – Involvement (பங்கேற்பு)
Be actively involved in their day-to-day life.
N – Nurture values (மூல்யங்களை வளர்த்து தருதல்)
Teaching good values and discipline.
Comments
Post a Comment