Skip to main content

 அகத்தீ உரையாடல் - 2

கல்வி என்பது வணிக பொருள் அல்ல !
நம் குழந்தைகளின் அடிப்படை உரிமை !
புதிய கல்வி கொள்கை பற்றிய ஒரு பார்வை.
முன்னால் அரசு கல்லூரி முதல்வர் பேராசிரியர் சிவகுமார்
04 டிசம்பர் 2022, ஞாயிறு
காலை 6.30 மணிக்கு
சிட்லபாக்கம் ஏரிகரை
____________
கடந்த ஞாயிறு National Biodiversity Act என்ற சட்டத்தின் முக்கியதுவமும் நடைமுறைபடுத்துவதில் உள்ள சவாலும் பற்றி விரிவாக எடுத்துரைத்தார் தமிழ்நாடு அரசின் உயிரி பன்மய வாரியதின் உறுப்பினர் பேராசிரியர் நரசிம்மன்.
ஒவ்வொரு மாநிலமும் உயிரி மேலாண்மை குழுவையும், உயிரி பதிவேட்டையும் அமைக்க வேண்டும். அமைக்காத மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்ற 10 லட்சம் அபராதம் என்று சொன்ன பிறகே ஊராட்சி வரை அமைத்தார்கள். சமீபத்தில் தான் மதுரையில் அரிட்டாபட்டியை மரபு உயிரி பன்மைய பகுதியாக அறிவித்துள்ளனர். இங்கும் ராஜச்தானில் மட்டுமே, உயர்ந்த மலை பாறைகளில் காணப்படும் கழுகு வகை உள்ளது. கிரனைட் கல் வெட்டுவதால் இப்பறவை இனம் அழிவின் விளிம்பில் உள்ளது.
மற்ற மாநிலங்களில் மூன்று நான்கு உயிரி பன்மய பகுதியாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. ஆந்திரா, தெலுங்கானா, கோவா, கார்னாடகா போன்ற மாநிலகளில் இந்த சட்டத்தின் மூலம் அறிவித்துள்ள மரபு உயிரி பன்மய பகுதிகளின் காரணமாக, அதையொட்டியுள்ள கிராமங்களின் உள்கட்டமைப்பையும் பல மடங்கு மேம்படுத்தியுள்ளனர். இந்தியாவிற்கான உயிரி பன்மய குழுவின் தலைமை அலுவளகம் சென்னை தரமணியில் தான் உள்ளது. பெரும்பாலான இடங்களில் பெயர் அளவுக்கே உள்ளது என்பது வருத்தமளிக்கிறது என்ற ஏராளமான தகவல்களோடு பகிர்ந்துகொண்டார்.
இதன் முடிவில் சிட்லபாக்கம் ரைசிங் குழுவின் முன்னெடுப்பில் ஏரி கரைகளில் மர கன்று நடுவதோடு நிறைவடைந்தது சந்திப்பு.
நாளைய நிகழ்விற்கு வாப்புள்ளவர்கள் அவசியம் பங்கெடுக்கவும், உரையாடுவோம்.
- பாரதி கண்ணன்














Comments