சூழலியல் பயணம்
21 மே 2022, சனிகிழமை
உழவி பண்ணை, விக்கிரவாண்டி
நகர, நரக வாழ்வியலில் இருந்து விடுபட்டு இயற்கைக்கு திரும்பும் பாதைக்கு திரும்ப விரும்பும் நண்பர்களுடனான இது போன்ற பயணங்கள் கடந்த எழு ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடத்திக் கொண்டு வருகிறோம்.
தொலைத்த மரபு அறிவையும் நஞ்சியில்லாத விவசாயமும், சத்தான உணவின் முக்கியதுவத்தை பற்றியும் மக்களின் தேடல் சமீப காலத்தில் அதிகரித்துள்ளது. ஆரோக்கியமில்லாத தலைமுறையும், பணம் பன்னுவதையே குறியாய் வைத்துள்ள நவீன மருத்துவமும் மக்களிடம் நம்பிக்கையை இழக்க வைத்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும்.
விக்கிரவாண்டி அனுராதா, நடராசன் தம்பதியர்கள் தன் ஒரே மகனுக்கு நஞ்சியில்லாத உணவை கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அதற்காக லட்ச ரூபாய் தருகிற வருமானத்திலிருந்து தங்களை விடுவித்து கொண்டே விவசாயத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக மாதிரி ஒருங்கிணைந்த 'உழவி'காய்கறி பண்ணையையும் 'ஞாயிறு இயற்கை உழவர் குழுவையும்' உருவாக்கினார்கள். 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது இதை வெற்றிகரமாக செயல்படுத்தி கொண்டிருக்கின்றனர். இவர்களை உழவி பண்ணையிலேயே சந்தித்தது மிகப் பெறும் அனுபவமாக இருந்தது.
"தொடகத்தில் 25 மூட்டை எடுக்க வேண்டிய நிலத்துல சீரக சம்பா நெல்லு 6 மூட்டைதான் எடுத்தோம். ஊரும், குடும்ப உறவுகளும், கிராம மக்களும் எங்களை பைத்தியங்கள் என்று சொன்னார்கள். நஞ்சில்லா விவசாயம் சாத்தியம் இல்லை என்றார்கள். மாப்பிள்ளை சம்பா நடவு செய்த பொழுது தானே புயல் வந்தது. சுத்துபட்டுல எல்லா விவசாயிகளுக்கும் மிகப்பெரிய நட்டம். எங்களுக்கு மட்டும் அப்போ நல்ல விளைச்சல். அப்போதான் கிராம மக்கள் எங்கள கவனிக்க ஆரம்பிச்சாங்க.
விடிய காலைலயே பெரிய பெரிய பணக்காரங்க, புற்று நோயாளிகள் என்று பலர் வந்து உணவு மற்றும் மருத்துவத்துக்கான ஆலோசனைகளை எங்ககிட்ட கேட்டுக்கும் பொழுது, எங்களக்கே எங்கள் மேல ஆச்சரியமா இருக்கும், நாம அப்படி என்ன செஞ்சிட்டோம்னு. இந்த மன நிறைவு போதும்" என்று வாய் விட்டு சிரிக்கிறார்கள் இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நம்பிக்கைக்கான வாரிசுகள்.
நஞ்சில்லா உணவையும்
சுத்தமான குடிநீரையும்
மாசியில்லா காற்றையும்
வரும் தலைமுறைக்கு உறுதி செய்வோம்.
பாரதி கண்ணன்
தாம்பரம் மக்கள் குழு
Comments
Post a Comment