Skip to main content

 பனங்காடு அறகட்டளை

சூழலியல் பயணம்
"இங்கு ஊர்ல எல்லாரும் கள்ளுதான் இரக்குவாங்க. கடுமையான காவல்துறை கெடுபிடி. மாமூலும் வாங்கிட்டு பொய் வழக்கும் பொடுவாங்க. எங்க குடும்பம் அப்போ கள்ளு குடிக்கரது தப்பு என்ற எண்ணத்துல கள்ளுக்கு எதிரானவங்களா இருந்தோம்.
2017ல பெரிய வரட்சி விவசாயத்த தொடர முடில. பனை மரம் தான் என் கண்ணுக்கு அப்போ தெரிந்தது. பனை ஓலைளில் பொம்ம செய்து விற்க ஆரம்பிச்ச பிறகு, பதனீர் இரக்கி விக்கலாம்னு முடிவெடுத்தேன். முப்பத்தி ஐந்து வயசுக்கு மேல இருக்கும் எனக்கு, ஊர்ல போய் பனை மரம் ஏர கத்து தாங்க அப்படினா எல்லாரும் சிரிப்பாங்கனு, பனை மேல பாரத்த போட்டு வேண்டிகிட்டு நானே மரம் ஏர கத்துகிட்டேன்.
காவல்துறையினர் வந்தவுடனே எல்லாரும் பயந்து ஓடும்பொழுது நான் மட்டும் ஓட மாட்டேன். என்கிட்ட வந்து பாத்துட்டு பதனீர் என்பதால, என்ன எதுவும் செய்ய மாட்டாங்க. கருப்பட்டி காய்த்து விற்க ஆரம்பித்தோம். கள்ளு மட்டும் இரக்கிவிக்க நிரபந்திக்கபட்ட காரணதினாலும் பனை பொருட்களின் முக்கியதுவம் மக்களிடையே குறைந்த காரணித்தினாலும் கருப்பட்டி போன்ற பல மதிப்பு கூட்டின பொருட்களை எப்படி செய்வது என்று தெரியாமலேயே வளர்க்கப்பட்டனர் எங்கள் தலைமுறை.
அதை மீட்டெடுப்பதற்கான அரிய வாய்ப்பாக தான் 2020ல் கொரோனா வந்ததை பார்கறோம். எல்லா இடங்களிலும் கடுமையான கெடுபிடி காரணமாக கள்ளுக்கான வாடிக்கையாளர்கள் கிராமதுக்கு வர முடியவில்லை. வருமானம் மிகப் பெறும் அளவு தட்டுபடவே, அப்பொழுதுதான் மக்கள் கருப்பட்டி பக்கம் கவனம் செலுத்த தொடங்கினர். நூற்றுகணக்கான பனையேறிகள் இருக்கும் கிராமத்தில் முதலில் 5 பேர் முன்வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக 'கள் உரிமைக்காக' பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடும் பெரியவர் ஐயா நல்லசாமி அவர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவே கள் பற்றிய என்னுடைய பார்வையை மொத்தமாக மாற்றியது. சங்க இலக்கியம் முழுவதும் கள்ளினுடைய நற்குணங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளது. பனையேறிகளுக்கான உடல் வலிமையை கள் தான் கொடுக்கிறது. கள்ளை போதையாக இல்லாமல் மருந்தாகவும் உணவாகவும் அருந்துபவர்களுக்கு மட்டுமே கொடுக்கிறோம். சித்த மருத்துவதில் கள் மிக முக்கியமான உட்பொருள். பல ஆண்டுகளாக இருந்த என் மகளின் தோல் வியாதியை கள் மூலமாக குணபடுத்தியுள்ளேன். என் இளைய மகள் கரிஷ்மா தமிழகத்திலேயே இளம் பனையேறியாக தற்பொழுது விளங்குகிறாள்.
உணவு தேடும் உரிமை அரசமைப்பு சட்டத்தில் எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கள் ஒரு போதை பொருள் என்றால் ஏன் இந்தியாவில் கள்ளுக்கான தடை தமிழகத்தில் மட்டும் உள்ளது. காரணம் இங்குள்ள சாராய வியாபாரிகளை ஊக்குவிக்க தான் இந்த தடை. கள்ளில் உள்ள கலப்படத்தை தடுக்க முடியவில்லை என்பதற்காக தான் தடை. அதனால் கலப்படம் செய்யாதவர்களும் பாதித்துள்ளனர். அரசியல் அமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள எங்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. தோசையை புளிக்க வைக்க கள்ளை பயன்படுத்தியுள்ளனர் எங்கள் முன்னோர்கள். எங்கள் வாழ்கையில் எல்லா அங்கதிலும் கள் இருந்துள்ளது.
பொய் வழக்குகள் மீதான பல கட்ட போராட்டதிற்கு பிறகு இந்திய அரசமைப்பு சட்டதிற்கு உட்பட்டு அறவழியில் எங்கள் உணவான கள் இரக்குவதையே போராட்டமாக நடத்தி வருகிறோம். 121வது நாள் போராட்டதிற்கு நீங்கள் வந்தது மகிழ்ச்சி. அடுத்தகட்டமாக ஜூன் 18, 19 பனை திருவிழாவாக நடத்த திட்டம். கண்டிப்பாக வாங்க" என்று வாஞ்சையோடு அழைத்தார்கள் பாண்டியன் பனையேறியும் இவர் மனைவி மேகலா அக்காவும்.
கள் குடிப்பது தவறு என்ற அனைவரின் கருத்தும் மாறியது. வந்திருந்த அனைவரும் நமது மரபு பானமான கள் குடிக்க முன் வந்தோம்.
கள் எமது உணவு !
கள் எமது உரிமை !
பாரதி கண்ணன்
தாம்பரம் மக்கள் குழு
21 மே 2022, சனிகிழமை
நரசிங்கனூர், விழுப்புரம்
இதுபோன்ற அடுத்தடுத்த சூழலியல் பயணங்கள் திட்டமிடபட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் தொடர்பு எண்ணையும் பகுதியையும் தெரிவிக்கவும்.


























Comments