பால் - பாலினம் - பாலீர்ப்பு
அகத்தீ சார்பாக வானகத்தில் ஒருங்கிணைத்த நாடகப் பட்டறையில் அறிமுகமாகி நெருக்கமான 'நிறங்கள்' அமைப்பின் தோழர்களோடு ஒரு உரையாடலை திட்டமிட்டடோம். (22/01/23). இவர்கள் மாற்று பாலினம் சார்ந்த மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமான வேலைகளை முன்னெடுக்கிறார்கள்.
• நம்மில் எத்தனை பேருக்கு Sex (பால்) & Genderக்கு (பாலினம்) வித்தியாசம் தெரியும் என்ற கேள்வியோடு தொடங்கினார் தோழர் சிவா.
• LGBTQIA+ என்றால் என்ன ?
• பாலீர்ப்பு எத்தனை வகைப்படும் ?
• 'அலி' '9' 'அஜக்' என்ற வார்த்தைகளுக்கு மாறாக "திருநங்கை," "திருநம்பி" என்ற அழகான மதிப்பிற்குரிய பெயர் வந்ததற்கு பின்னால் உள்ள வரலாற்று காரணமும் பின்னணியும் என்ன ?
• இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு எப்படி மாற்று பாலினத்தைச் சார்ந்த மக்கள் ஒப்பிட்டலவில் தமிழ்நாட்டில் மதிப்பிற்குரியவர்களாக சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டனர் ?
என்று ஏராளமான கேள்விகளுக்கு பல உதாரணங்களோடு சிறப்பாக விளக்கினர்.
தான் பெற்ற குழந்தைகளையே வெறுக்கும் அளவுக்கு மாற்று பாலினத்தை சார்ந்த மக்களின் வாழ்க்கை மோசமாக உள்ளது. அப்படிப்பட்ட பெற்றோராக, நண்பர்களாக நாம் இல்லாமல் இருக்க இதைப்பற்றிய புரிதலும் தெளிவும் நம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது.
பிறந்து வளரும் நம் குழந்தையின் அலைபாயும் மனதை ஒரு கட்டத்தில் யாராலும் தீர்மானிக்க முடியாது என்பதே இயற்கையின் நீதி. இதுவே வரலாறு நெடுகிலும் உணர்த்தப்பட்டு வந்துள்ளது.
Comments
Post a Comment