Skip to main content

உள்ளூர் வரலாறு - தாம்பரம்

 உள்ளூர் வரலாறு - தாம்பரம்

ஒரு நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை தாம்பரத்தை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று வந்தோம். நாம் வாழும் பகுதினுடைய வரலாற்றை தெரிந்து கொள்வதும் அதை ஆவண படுத்துவதும் மிகவும் முக்கியம்.
இந்த பயணத்தில் பங்கு எடுத்த பள்ளியில் இருந்து விடுபட்ட (Home schooler) 12 வயது நிரம்பிய மாணவன் நிஷாந்த் "சோழர் வரலாறு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் தஞ்சாவூர் பக்கம் தான் போகணும் அப்படின்னு நினைத்தேன், ஆனால் சோழர் வரலாற்றை பற்றி நம்ம தாம்பரம் பகுதியிலேயே தெரிந்து கொள்ள முடியும் என்பது எனக்கு ஆச்சரியமாகவும் புதிய தகவலாகவும் இருக்கு" என்றான்
• மணிமங்கலம் போர்க்களத்தை பார்த்தது
சாளுக்கிய மன்னன் புலிகேசிக்கும் பல்லவ மன்னனுக்கும் நடந்த மிகப்பெரிய போர் மணிமங்கலத்தில் தான் நடந்தது. இந்திய துணை கண்டத்தில் நடந்த மிகப்பெரிய போர்களில் ஒன்று இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சேலையூர் ( சிலை + ஊர் )
முன்பு இங்கு சிலைகள் பெருமளவில் செய்த காரணத்தினால் இந்த பெயர் வந்ததாகவும், இந்த பகுதியில் கல்லுகுட்டை உள்ளது, அங்கிருந்துதான் சிலைகள் செய்வதற்கான கற்கள் எடுக்கப்பட்டதாகவும் பதிவுகள் உள்ளது.
சேலையூர் குளம்
இந்த குளத்தில் உள்ள தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்பதை குறிப்பிட்டுள்ள ஆயிரம் ஆண்டுகள் கடந்த கல்வெட்டையும், அந்த குளத்தையும் பார்த்தோம். இதற்கான காரணம் அன்று தண்ணீர் தட்டுப்பாடு இருந்த காரணத்தினால் குடிநீருக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதாகும்.
அதேபோல் திரிசூலம், சோமமங்கலம், மண்ணிவாக்கம், மணிமங்கலம், மாடம்பாக்கத்தில் உள்ள சோழ காலத்து கோவில்கள் அதன் வரலாறுகளை தெரிந்து கொண்டது சிறப்பாக அமைந்தது.
ஏராளமான தரவுகளுடன் இந்த வரலாற்றுப் பயணத்தை மிகவும் சிறப்பாக எங்களை வழிநடத்தி சென்றார் தோழர் வெஸ்லி, மாமல்லபுரம் கல்வெட்டுகளில் முனைவர் பட்டம் வாங்கியவர். அடுத்த தலைமுறையிடம் இதை கடத்த வேண்டும் என்ற இவரின் தீராக தாகத்தை தொல்லியல் படிப்பு படிக்கும் மாணவி அன்பரசியின் வருகையும் பங்களிப்பும் நிவர்த்தி செய்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

























Comments