அகத்தீ
ஐந்தாவது பூதம் என்ன ?
தொடர்ச்சியாக இராண்டாவது ஆண்டு நேஷ்னல் பப்பிளிக் பள்ளி கோபாலபுரம் மாணவர்களை நேற்று தாம்பரம் பச்சை மலை மற்றும் சிட்லபாக்கம் ஏரி கரைக்கு அழைத்துச் சென்றோம்.
அவர்களுடன் நடந்த உரையாடலின் முடிவில் "2015 முதல் 2021 வரை, சென்னை ஐந்து பூதங்களில் நான்கு பூதத்தை பார்த்துவிட்டது ( மழை வெள்ளம், புயல், வரட்சி, கொரோனா ) ஐந்தாவது கூடிய விரைவில் வர போகிறது, தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் மலையில் இருந்து கீழே இரங்கியவுடன் நினைவு இருந்தால கேளுங்க சொல்கிறேன்" என்றேன்.
மலையிலிருந்து இரங்கும் போதே மூன்று மாணவிகள் மட்டும் "ஐந்தாவது பூதம்" என்ன வரபோகிறது என்று ஆர்வத்துடனும் பயத்துடனும் கேட்டார்கள் ?
அவர்களிடம் "ஐந்தாவது பூதம்" என்ன என்று சொன்னவுடன் பயத்தை வெளிபடுத்தினார்கள். "இதிலிருந்து மீண்டு வர முடியும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது" என்றேன். "எப்படி ?" என்றார்கள்.
"இதைப்பற்றி தெரிந்து கொண்டவர்கள் தீவிரமாக செயல்பட தொடங்குவார்கள்
அவர்கள் மீதுள்ள நம்பிக்கையே காரணம். இப்போது உங்களிடம் கூறியுள்ளேன் நம்பிக்கை கூடி உள்ளது" என்று சொல்லிவிட்டு இளம் சூழலியல் செயல்பாட்டாளர் 'கிரேட்டா தன்பேர்கை' அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.
"எந்த ஒரு பொருள் வாங்கும் போதும் உண்மையில் அது நமக்கு தேவையா என்று நமக்குள் கேட்க வேண்டும், வாங்கிய பிறகு அந்த பொருள் நமக்கு தேவையில்லை என்னும் போது அதை முறையாக அப்புறபடுத்த முடியுமா என்பதை உறுதிபடுத்திவிட்டு வாங்க வேண்டும்" என்ற என் வேண்டுகோளை ஏற்றார்கள்.
அந்த ஐந்தாவது பூதம் என்னவாக இருக்கும் ?
Comments
Post a Comment