Skip to main content

அகத்தீ - நாட்டு மாட்டு பண்ணை மற்றம் புதுதாங்கள் ஏரிக்கரைக்கு ஒரு பயணம்

 அகத்தீ

நாட்டு மாட்டு பண்ணை மற்றும்

புதுதாங்கள் ஏரிக்ககரைக்கு ஒரு பயணம்
50க்கும் மேற்பட்ட குஜராத் ரகங்களான காங்கிரிட்ஜ் மற்றும் கிர் மாடுகளை கடந்த ஏழு ஆண்டுகளாக தாம்பரம் போன்ற நகரத்தில் வெற்றிகரமாக வளர்த்து வரும் தமிழன் மாட்டுப்பண்ணைக்கு சென்று பார்தது.
தாம்பரம் மக்கள் குழுவின்
முன்னெடுப்பில் புதுப்பித்து தூர்வாரப்பட்டு மரங்கள் நட்டு பனை விதைகள் விதைத்து பராமரிக்கப்பட்ட புதுத்தாங்கல் ஏரிக்கு சென்று பார்தது.
காலை 7 மணி
முதல் 9 மணி வரை
02 / 09 / 23 | மேற்கு தாம்பரம்
நாம் வாழும் பகுதியில் நாம் சென்று தெரிந்து கொள்ள வேண்டிய இடங்களை நேரில் பார்த்து புரிந்து கொள்வதற்கான முயற்சி இந்த முன்னெடுப்புகள்.
கடந்த சனிக்கிழமை மேற்கு தாம்பரத்தில் உள்ள இந்த இரண்டு இடங்களுக்கு சென்று பார்த்து வந்தோம்.
மாடு வளர்ப்பதற்கான பெரிய அனுபவ அறிவும் பின்னணியும் இல்லாமல் தைரியமாக தான் செய்திருந்த வேலையை விட்டுவிட்டு இன்று முழு நேரமாக தமிழன் நாட்டு மாட்டு பண்ணை மூலமாக பால் விற்பனை செய்து கொண்டுள்ளார் தோழர் ராஜேஷ்.
தான் செய்வதை தற்போது மற்றவர்களுக்கு முன் உதாரணமாக சொல்ல முடியுமா என்றபோது "இல்லை நானே இப்போது முதலில் இருந்து தொடங்க முடியுமா என்றால் சந்தேகம் தான் என்கிறார்." அந்த அளவிற்கு நகரங்களில் மாடுகள் வளர்ப்பது சவாலாக மாறி உள்ளது.
அவர் விற்பனை செய்யும் பாலின் விலை ஏன் ஒரு லிட்டருக்கு நூறு ரூபா என்ற கேள்விக்கு ரொம்ப இளிமையாக இதற்கான செலவுகளை விளக்கினார். தவிடின் விலை எப்படி ஐந்து ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதையும் எக்காரணம் கொண்டும் தான் பாலில் தண்ணீர் கலப்பதில்லை என்பதையும், பொறுமையாக அனைவரின் கேள்விக்கும் பதில் அளித்தார்.
மாட்டுக்குள் உள்ள சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இரண்டு பசு மாடுகளுக்குள் சண்டை நடந்தால் காளைமாடான பில்லா தான் தடுக்குமாம். மனிதர்களுக்கு உள்ளும் இப்படித்தான் என்று வந்திருந்த அனைத்து பெண்களும் ஆமோதித்தனர்.
பசு மாட்டுக்கு பிரசவம் பார்ப்பது முதல் மாடுகளுக்கு தேவையான அடிப்படை மருத்துவம் பார்ப்பது வரை இத்தனை ஆண்டுகளில் தனக்கான அறிவை அனுபவத்தின் மூலம் பெற்றுள்ளார்.
"மாடு இறந்து போனால் கறி கடைக்கு தான் கொடுக்க முடியும்" என்று மாடு வளர்ப்பவர்களின் பொருளாதாரத்தை விரிவாக எதார்த்தமாக மறுக்க முடியாத அளவிற்கு முன் வைத்தார்.
2016ல் அவர் வாங்கிய முதல் மாடு தங்கம் அகத்தி தோட்டத்தில் தான் சில வாரங்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
__________
மழை வெள்ளத்திற்கு ஓராண்டு முன்பாகவே 2015ல் தொடர்ச்சியாக புது தாங்கள் ஏரியை தாம்பரம் மக்கள் குழுவின் இளைஞர்கள் முழுமையாக முன்னெடுத்து பங்கெடுத்ததின் விளைவு இன்று அந்த ஏரி தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
நாங்கள் வைத்த பனை மரங்கள் எங்களை விட பல மடங்கு உயரமாக வளர்ந்துள்ளதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்த இரண்டு இடங்கள் சென்று பார்த்தை பகிர்ந்து கொண்ட பின் காலைப் பொழுது நிறைவாக தொடங்கியது.
இதுபோன்ற பயணங்கள் மற்றும் தாம்பரம் பகுதியில் நடக்கும் நிகழ்வுகளில் பங்கெடுக்க ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் இணைப்பில் இணையவும்.

Comments