Skip to main content

சிறார் களம் - 13/11/2023

அகத்தீ

குழந்தைகளுக்காக நாம் ஒரு முழு நாள் செலவிட வேண்டும் என்பதை பற்றி காஞ்சனா தோழர் , பாரதி தோழர், ரொம்ப நாட்களாக பேசி கொண்டிருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக பத்து வயதுக்கு மேற்பட்ட 15க்கும் கூடுதலான சிறுவர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வை கடந்த திங்களன்று ஏற்பாடு செய்தோம்.
 
பாரதி தோழர், காஞ்சனா தோழர், அசோக் தோழர், ராம் தோழர், பாவணன் தோழர் இவர்களின் ஒரு வார முயற்சியின் மூலமாக ஒவ்வொருவரின் ஆலோசனைகளின் படி ஒவ்வொரு மணி நேரத்துக்கும் புதுவிதமான விளையாட்டுகள், கதை சொல்லல் , கூட்டு செயல்பாடுகள் என்று பல நடத்தினோம்.
 
முதலில் தனித்தனி குழுவாக பிரித்து அவர்களைப் பற்றின அறிமுகத்தை நடத்தினோம். அவர்கள் குழுவுக்கு ஒரு பெயரை தேர்ந்தெடுக்க சொல்லி அதற்கான காரணத்தை விளக்க சொன்னோம். ஒரு தலைப்பு எடுத்து தொடர் கதை சொல்லுதல் அதன் பிறகு மதிய உணவு, விளையாட்டுகள் standing kokko, pick the cup, முடித்தவுடன் கணக்கும் இனிக்கும் அமர்வு இருந்தது. ஒவ்வொரு குழுவும் கடைசியாக ஒரு சிறப்பான நாடகத்தை இயற்றினர்.
 
நேற்றைய நிகழ்விற்கு பிறகு சிறுவர்களுக்கான தொடர் சந்திப்பை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தை பசங்க கொடுத்தாங்க. மொத்தத்தில் செயலுக்கான மிகப்பெரும் ஊக்கத்தை இந்த நிகழ்வு ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.
 
- தோழர் கோமதி.
 
தாம்பரம் வட்டாரத்தில் குழந்தைகள், சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம், தற்சார்பு வாழ்வியல் போன்றவற்றில் ஆர்வம் உள்ள தோழர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் இணைப்பில் சேரலாம்.

Comments