அகத்தீ
நாம் ஏன் ஒரு சமூகமாக இயங்க வேண்டும் ?
வணக்கம் தோழர்களே கடந்த நவம்பர் 5-ம் தேதி நடைபெற்ற கூடுகையை பற்றி எனது சிறிய கண்ணோட்டம். முதலில் பாரதி, காஞ்சனா, கோமதி, ரேஷ்மா மற்றும் அசோக் தோழர்களுக்கு என் மனமர்ந்த நன்றிகளை தெவித்துக் கொள்கிறேன் . இத்தகைய ஒருநாள் கூடுகையை சாத்திப்படுத்துவதே சிரமம். அதையும் எந்த தொய்வும் இல்லாமல் சிறப்பாக நடத்திச் சென்றதற்காக எனது பாராட்டுகள். பல நாட்களுக்கும் பிறகு அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நேரம் கடந்து வந்தாலும் சிரித்த முகங்களுடன் அனைவரும் வரவேற்பதில் தொடங்கி வர்ஷாவின் பாடல் மற்றும் முதலாவதாக தொடங்கிய குழு செயல்பாடு (TO WORKSHOP ) அனைவரின் கூச்சத்தன்மையை விடுவித்து குழுவினருடன் ஒன்றிணைய வைத்தது.
விளையாட்டு என்றுமே உடலிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தரும். சமார்த்தியமாக பாரதி தோழர் முதல் செயல்பாடாக அதை செய்தார். பிறகு குழுக்களாக பிரிந்து ஒருவரைப் பற்றி மற்றொருவர் அவர்களின் அறம் சார்ந்த பண்புகளை பேசியது ஆரோக்யமான உரையாடலாக இருந்தது. சிரித்து மகிழ்ந்து அனைவரின் கதைகளையும் கேட்டதும், குழந்தைகளின் கனவு பள்ளி எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களை குழுவாக உரையாடவைத்து கேட்டறிந்தது உண்மைகளை தெரியப்படுத்தியது.
வாசிப்பும் உரையாடலும் எனக்கு மிகவும் பிடித்தப் பகுதி. நெடுநாட்களுக்குப் பிறகு இரண்டு பக்க உரையைப் படித்து அதை கலந்தாலோசித்து அனைவரின் முன்னிலையிலும் அதை எடுத்துரைத்து விவாதித்து பேசியது நமக்குள்ளேயும் ஏதோ இருக்குது போல என புரியவைத்தது. வாசிப்பைப் பற்றியும், புத்தகங்களின் அறிமுகமும், தேர்ந்தெடுத்த தலைப்புகளும் வேற மாதிரி, பாரதி தோழர் மிக்க நன்றி. குழந்தைகளை இந்த முறை கவனத்தில் கொண்டு அவர்களையும் ஏதோ ஒரு வகையில் நாம் ஈடுபடுத்தியது மிக அருமை.
அடுத்தது மதிய உணவுக்கு ரேஷ்மா மற்றும் மணி தோழருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். சங்கர் தோழருக்கு என் தனிப்பட்ட நன்றி. ஏனெனில் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப இருந்தது உங்களின் கைபக்குவத்தில் செய்த தயிர் சாதம். மொத்தத்தில் மதிய உணவு சிறப்பு சிறப்போ. தோழர் அனீஸ் அவர்களின் சிறுதானிய கேக்கோ அருமையோ அருமை.
ஒலி ஆற்றுப்படுத்துதல்
சொல்ல வார்த்தைகளில்லா அனுபவம். மீண்டும் அதை அனுபவப் பூர்வமாக உணர காத்திருக்கிறேன், நன்றி இதை சாத்தியபடுத்தியதற்கு. இயற்கையுடன் நாம் இணைவதை உணர்வதற்கான ஒரு ஆழ்நிலை பயிற்சியாக அனுவியாவின் அமர்வு இருந்து
முடிவாக திருவின் அமர்வில் உடலை வருடி உடலை ஆற்றுப்படுத்தும், மனதையும் உடலையும் தளர்வுபடுத்தும் மெல்லிய இசையுடனான அந்த நடனம் மிக அருமை. தெரிந்தாலும் செய்வதற்கு சோம்பேறித்தனமாக உனரும் நான் இப்படி குழுவாக செயல்படும் போது சோம்பேறித்தனத்தை முறியடிக்க உதவுக்கிறது. குழுவாக செயல்பட்டால் அனைத்தையும் சாத்தியப்படுத்தலாம்.
ஆனால் அதை முன்னெடுக்க பின்னாடி ஒருவர் மட்டுமல்லாது பலருடைய உழைப்பும் தேவைப்படுகிறது. நல்ல தருணங்களை ஏற்படுத்தி கொடுத்தமைக்கு நன்றி தோழர்களே.
நிகழ்ச்சி நடத்துவதற்கு பெரும் உதவியாக இருந்த பாவாணர் தமிழ் வழி பள்ளியின் தாளாளர் மாந்தனேயன் தோழர் அவர்களுக்கும் நன்றி.
- வித்யா ராணி
தாம்பரம் வட்டாரத்தில் குழந்தைகள், சுற்றுச்சூழல், இயற்கை விவசாயம், தற்சார்பு வாழ்வியல் போன்றவற்றில் ஆர்வம் உள்ள தோழர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் இணைப்பில் சேரலாம்.
Comments
Post a Comment