Skip to main content

 தீபாவளி நாளன்று வீடு முழுவதும் விளக்கேற்றுவோம்... பாரம்பரிய இனிப்புகள் செய்து நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வோம் சூழலுக்கேற்ற புத்தாடைகள் உடுத்துவோம்.. சக உயிர்களுக்காகவும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்காகவும் பட்டாசுகளை தவிர்ப்போம்.

நம் மகிழ்ச்சிக்காக வெடிக்கும் ஒவ்வொரு பட்டாசுக்கு பின்பு நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களால் புண்ணாகிப்போன பிஞ்சு விரல்கள் ஏராளம்! குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க வெடிக்கு விடை கொடுப்போம்!
நாம் ஏற்படுத்தும் வெடிச் சத்தத்தினால் முதியவர்கள், பிஞ்சு குழந்தைகள், பறவைகள், நாய், பூனை, மாடு, போன்ற விலங்குகளும் மிகப்பெரிய துன்பத்திற்கு உள்ளாகின்றன பல தமிழக கிராமங்களில் பறவைகள் வரத்து பாதிக்கப்படக் கூடாது என்பதால் பட்டாசை அறவே தவிர்த்து வருகின்றனர்.
(எ.கா) நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் கிராம மக்கள் பட்டாசுகளை எப்பொழுதும் வெடிப்பதில்லை காரணம் அங்கு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
பட்டாசு வெடிப்பதினால் நாம் நம் காற்றையும் மண்ணையும் நிலத்தடி நீரையும் மிகப்பெரிய அளவுக்கு நஞ்சாக்குகிறோம்.இதனால் பல நோய்களுக்கு உள்ளாகிறோம் குறிப்பாக புற்றுநோய் மற்றும் ஏராளமான சுவாச பிரச்சனைகளால் அவதிப்படுகிறோம்.
தீபாவளி அன்று மட்டும் ஆபத்தான கழிவுகளை ஏராளமாக நாம் ஏற்படுத்துவதனால் இதை சுத்தப்படுத்தும் துப்புரவு தொழிலாளர்கள் மிகப் பெரிய இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் கொடூரமான விபத்தில் பலர் இறக்கின்றனர் பலர் நடைப்பிணமாகின்றனர். பல குடும்பங்கள் சின்னாபின்னமாகின்றன. நம்முடைய ஒரு நாள் கொண்டாட்டத்திற்காக உயிர்கள் பலியாவது நியாயமா?
ஒருவேளை உணவுக்காக பலர் அவதிப்படும் நம் நாட்டில் பல கோடி ரூபாய்களை தீபாவளி நாளன்று மட்டும் தீக்கு இரையாக்குவது நியாயமா?
சில வினாடிகள் மகிழ்ச்சிக்காக நான் கடினப்பட்டு உழைத்து சம்பாதித்து சேமித்த பணத்தை ஒரே நாளில் கரியாக்குவது சரியா?
என்றோ வாழ்ந்ததாக சொல்லப்படும் தீயவனை எப்பொழுதோ கொன்றதற்கு இன்றுவரை கொண்டாடும் நாம். நம் மண்ணையும் மக்களையும் நாசமாக்கி கொண்டிருக்கும் நவீன நரகாசுரனை என்ன செய்யப் போகிறோம்?
என்னதான் தீயவன் ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் பல நூற்றாண்டுகளாக ஒருவன் இறப்பை கொண்டாடும் அளவு மனம் படைத்தவர்கள் அல்ல நாம்? இது நம் மண்ணின் பண்பும் அல்ல, மனித பண்பும் அல்ல.!
*"நாங்கள் தினமும் காலையில 7 மணியில இருந்து சாயந்திரம் ஆறு மணி வரைக்கும் வேலை செய்வோம் கூலி எனக்கு 40 ரூபா. போன மாசம் என்னோட தானே செஞ்சிட்டு இருந்த ஒரு பொண்ணு கை கால்ல புண்ணு வந்து செத்துப் போயிட்டா.*
*சுவாசினி வயது 13.*
*Tragedy burried in happiness ஆவணப்படத்தில் இருந்து*
தீபா ' *வலி* ' யை தீபாவளி திருநாளாக கொண்டாடுவோம் !வெடிக்கு விடை கொடுப்போம்!
எல்லா உயிர் மீதும் அன்பு கொள்வோம்!
இயற்கையின் அன்பால் இணைவோம்.
*தாம்பரம் மக்கள் குழு*







Comments