Skip to main content

 தாம்பரம் மாநகராட்சியின் சுகாதார துறை ஆய்வாளர் (Sanitary inspector) வீட்டிற்கு திடீர் வருகை

எங்கள் தெருவை சுத்தம் செய்யும் பொழுது துப்புறவு மேற்பார்வையாளர் எங்கள் வீட்டில் மக்கும் உரம் செய்வதை பார்த்து சொன்னதை ஒட்டி கடந்த புதன் காலை கிழக்கு தாம்பரம் பகுதிக்கான சுகாதார துறை ஆய்வாளர் திரு சாமுவேல் அவர்கள் தீடீரென்று வீட்டிற்கு வந்தார். வீட்டில் நிறுவப்பட்டுள்ள 'பசுமை தொட்டி 3.0', 'பசுமை தொட்டி 1.0" வையும் ஆச்சர்யத்துடன் பார்த்து அதை பற்றி விளக்கமாக கேட்டு விசாரித்தார்.
எப்போது இருந்து இத செய்யரிங்க ?
எவ்வளவு நாளாக மக்க வைக்கரிங்க?
என்னலாம் கழிவுகள போடரிங்க ?
வேர ஏதாவது இதுல ஊத்தரிங்களா ?
மண்புழு உரத்த பசுமை தொட்டியின் துணையுடன் கடந்த 2019 ல் இருந்து உற்பத்தி செய்வதாகவும், இலை தழை, வீட்டு காய்கறி கழிவுகள் மட்டுமே போடுவதாகவும், தொடக்கத்தில் நன்ணுண்மிகள் (Good effective micro organism) தெளித்ததாகவும், ஒன்றரை ஆண்டு கழித்து இப்போது தான் சில நாட்களுக்கு முன்பு 25 மூட்டை மண்புழு உரம் எடுத்தாகவும், இன்னுமொறு 25 மூட்டை எடுக்கும் அளவுக்கு உள்ளதாகவும், எப்படி சலித்து எடுத்தேன் உட்பட எல்லாவற்றையும் விளக்கமாகவும் விரிவாகவும் தெரிவித்தேன்.
கடந்த 5 ஆண்டுகளாக ரசாயனம் இல்லா வீடாக மாற்றுவதற்கு நாங்கள் எடுத்த எல்லா முயற்சிகளையும் அவரிடம் காண்பித்து விளக்கினேன். பாத்திரங்கள் தேய்க்க, துணி தோய்க்க, வீடு துடைக்க நாங்களே செய்த இயற்கை சுத்தபடுத்தியையும் (Bio-enzymes), தூள்களையும் காட்டி அதன் செய்முறைகளையும் விளக்கினேன். அதன் எல்லாவற்றிலும் மாதிரி வேண்டும் என்று கேட்டுகொண்டார்கள். இவை எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வெகுவாக பாராட்டியவர், தாம்பரம் மாநகராட்சி சார்பாகவே இந்த சிறப்பான முன்னெடுப்புகளை பரவலாக கொண்டு செல்ல ஆவணம் செய்வதாக உறுதியளித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
கடும் எதிர்ப்பு, எள்ளல், கிண்டல்களுக்கு நடுவில் மன உறுதிபாட்டுடன் எடுத்த இந்த முயற்சிக்கான முக்கிய அங்கிகாரமாக சுகாதார ஆய்வாளருடன் நடந்த இந்த உரையாடல் அமைந்தது. மண் சார்ந்த இந்த முயற்சிக்கு என்னை கடுமையாக விமர்சித்தவர்களே இதற்கு சாட்சியாக இருந்தார்கள் என்பது நகை முரண்.
இது போன்ற பல உதாசீனங்களை சந்தித்து அதை பற்றி எல்லாம் கவலைபடாமல் ஒய்வில்லாமல், தொய்வடையாமல் என்னை போன்றவர்களுக்கு சலிக்காமல் வழி காட்டி கொண்டிருக்கும் தோழர் இஸ்மாயில், பிரியா, தனா திலக் அவர்களுக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
மண்ணை வளப்படுத்துவோம், மக்களின் மணங்களையும் வளப்படுத்துவோம் !
- பாரதி கண்ணன்
தாம்பரம் மக்கள் குழு




















Comments