Skip to main content

 அகத்தீ

பொம்மலாட்டம்

"அந்த காலத்துல மக்கள் எல்லாருக்கும் மாயசக்தி இருந்தது....அந்த ரகசியம் அங்கு இருக்க பழைய கிணற்றுள்ள இருக்கு"னு பாட்டி சொல்ல
"மாய சக்தியா.....?" என்று கோமாளி ஆச்சரியப்பட
"அது என்னனா..... ? அவங்க எல்லாரும் ஒற்றுமையா இருந்து, காடு, மலை, ஆறு, என்று எல்லாவற்றையும் பத்திரமா பாதுகாத்து மகிழ்ச்சியா இருக்கும்பொழுது இருந்த மாய சக்தி அது....." என்று கிணற்றுக்குள் இருந்து வந்த முதலை சொல்ல ஆரம்பித்தது.
இப்படியாக "கோமாளி" நாடகம் பயணிக்க, சிறார்களின் வெடி சிரிப்பு, கேள்விகள், கிண்டல்களுக்கு நடுவே குட்டி மழையுடன் நிறைவடைந்தது.
மரம், கிளை, பழம் விளையாட்டில் தொடங்கி, ஏழு குழுவாக குழந்தைகள் பிரிந்து அவர்களுக்குள் கதைகள் பேசி, காதாபத்திரங்களை வரைந்து,வெட்டி, ஒட்டி, விரல் பொம்மைகளாக மாற்றி, நடித்து, கதைத்து, விளையாடி, மகிழ்ந்தார்கள்.
எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள், நாற்பதற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் வந்திருந்தார்கள். குழந்தைகளுக்கு சிறுதானிய உருண்டையும், பெற்றோர்களிடம் விஞ்ஞானிகள் செர் சி.வி.ராமன் மற்றும் டார்வின் புத்தகங்களை கொடுத்து மகிழ்ந்தோம்.
"ரொம்ப சிறப்பா பேச்சு....."
"அடுத்தது எப்போ நடத்துவீங்க..... ?"
"இங்கு தொடர்ச்சியா நடத்தரீங்களா..... ?"
இப்படியாக பெற்றொர்கள் பகிர்ந்து கொள்ள...
சிறுவர்கள் "இதுக்குமுன்னாடி இப்படி ஒரு நாடகம் பாத்ததே இல்ல...." வியன் சொல்ல "நான் டேபிள் டென்னிஸ் வகுப்ப விட்டுட்டு வந்தேன், எப்படி இருக்குமோனு நினைச்சேன், ஆனா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது" என்று வர்ஷா பகிர
"இதுக்கு முன்னாடி இப்படி விரல் பொம்மைகள்ளாம் நான் செஞ்சதே இல்ல.... எனக்கு நானே செஞ்சது ரொம்ப பிடிச்சது" என்று ஓம் சொல்ல....
இப்படியாக கடந்த வெள்ளிக்கிழமை நடந்த அகத்தீ சிறார்களம் நிகழ்வை உயிரோட்டமாகவும், அழகாகவுமாகினார்கள் பொம்மலாட்ட குழு தோழர்கள், அவர்களுக்கு நம் வாழ்த்துக்கள்.
சிறார்களம் - அகத்தீ




































Comments