Skip to main content

 வாழ்வியல் பயிற்சி - 29/11/22

சிகரெட் பிடிப்பது தப்பு என்றால் பற்பசையை (Toothpaste) வைத்து பல் துலக்குவதும் தப்பு. புகை பிடிக்கும் பொழுது ரத்த நாளங்களின் மூலமாக மூளைக்குச் சென்று போதையை ஏற்படுத்தி புற்று நோய்க்கு காரணமாக இருக்கின்ற நிக்கோட்டின் போன்ற பல வேதி பொருட்களை உள்ளடக்கியதே நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பற்பசைகளிலும் உள்ளது.
தன் மகளுக்கு நஞ்சில்லாத பயன்பாட்டு பொருட்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தோழர் திருகாப்பு அவர்களின் இயற்கையை நோக்கிய வாழ்க்கை பயணம் வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களில் தொடங்கியது.
பாத்திரம், துணி, மற்றும் தரை துடைப்பதற்கான சுத்தப்படுத்தி, பற்பொடி, குளியல் பொடி என்று எல்லாவற்றையும் விளக்கமாக செய்து காட்டினார்.
எழில் கட்டி செய்வதில் குறிப்பிட்ட அளவுக்கு வேதி பொருட்களை தவிர்க்க முடியாத சூழலில், குளியல் பொடியே சிறந்த தீர்வாகும் என்பதை அழுத்தமாக வலியுறுத்தியே எழில் கட்டி செய்து காட்டப்பட்டது.
குழந்தைகளின் நடனத்துடன் இனிமையாக நிறைவடைந்தது நிகழ்வு.
- அகத்தீ

























Comments