விதை பந்து செய்யலாம் வாங்க....
01/12/2022
எந்த உயிரினமும் இல்லாம மனிதனால் வாழ முடியாது ஆனால் மனிதன் மட்டும் இல்லை என்றால் அனைத்து உயிரினமும் மகிழ்ச்சியாக புவியில் வாழும்... என்ற வாழ்கையின் விதியை மாணவர்களுக்கு எடுத்து சொல்லி விளக்கிய பிறகு....
"மனிதர்கள் உலகத்தில் இல்லனா வெயில் காலத்துல மரத்துக்கு யார் தண்ணி ஊத்து வாங்க ?"
"அண்ணா விதை வந்ததா இல்ல மரம் வந்ததா முதல்ல ?"
பரிணாம வளர்ச்சியில் மரம் தான் மனிதர்களுக்கு முன்னோர்கள் என்று சொல்லி மனித இனத்தை ஒத்த வேறு சில உயிரினமும் இருந்துள்ளது என்று சில தகவல்களை பகிர, ஆச்சரியத்துடன் கேட்ட மாணவர்கள் .....
" அண்ணா இதை பற்றி நிறைய தெரிந்துகொள்ள ஆசையா இருக்கு, வேறு எங்காவது இதை போல நடத்தினா எங்களுக்கு சொல்விங்களா ?" என்று ஏக்கத்துடன் கேட்டார்கள்.
"அண்ணா என் பெயர் சகானா, 2019 ல அகத்தீ நடத்தின சிறார்களம் நிகழ்விற்கு வந்து இருக்கேன். நாட்டு மாட்டு பண்ணை, பச்சமலைக்கு எங்கள கூட்டிகிட்டு போனீங்க. பொம்மலாட்டம் கூட அன்னிக்கு நடந்தது.... " என்று சொன்னது நெகிழ்ச்சியாக இருந்தது.
கிழக்கு தாம்பரம் சேலையூரில் உள்ள குகன் பள்ளிக்கூடத்தில் நேற்று மாணவர்களிடம் விதை பந்து செய்யும் நிகழ்வு நடந்தது. இதை யோகா பயிற்றுனர் பசுபதி அவர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
Comments
Post a Comment