Skip to main content

 பாசங்களும் நேசங்களும்...

வழி அனுப்பிய தோழமைகள்‌...
நித்யா சிரினி தோழர் இருவரும் அவர்கள் மூன்று பிள்ளைகளுடன் பணி நிமித்தமாக கனடா நாட்டுக்கு குடி பெயர்ந்து உள்ளனர். தாம்பரம் மக்கள் குழுவிற்கு இவர்களின் பங்கு மிகவும் சிறப்பானது. இருவரும் அவர்கள் துறையில் தனிப்பெரும் ஆளுமைகள்.
கணினியின் மொழியை தமிழில் கற்பதற்கு நூல்கள் எழுதுவது, கரகாட்டம் ஜும்பா நடனம் என்று ஆட்டம் போடுவதில் பேராற்றலுடன் நித்யா ஒரு பக்கம் தூள் கிளப்ப...
அச்சில் இல்லாத தமிழ் நூல்களை வரும் தலைமுறைக்கு மிகுந்த பொறுப்போடு மின்னூலாக கொண்டு சேர்ப்பதில் சிரினியும் அவர் நண்பர்களும் இணைந்து தொடங்கிய கணியம் அறக்கட்டளையின் செயல் பிரம்மிக்கத்தக்கது.
இவர்களின் மிகப் பெரும் பணிக்கு அங்கீகாரமாக விகடன் விருதுகள், தமிழக அரசின் விருதுகள் பெற்று நம் எல்லோரையும் பெருமை அடைய செய்துள்ளனர்.
தன் பிள்ளைகளை தமிழ் வழி பள்ளியில் உறுதி காட்டி சேர்த்தது....
அதன் விளைவாக முதல் மகன் வியனின் அறிவு கூர்மையை வியக்கும் வண்ணம் பள்ளியே அவனை பாராட்டி தள்ளியது....
அனைவரிடமும் வாஞ்சையோடு ஒட்டிகொள்ளும் பாசக்காரி இரண்டாவது மகள் இயல்...
சுட்டி தனதுக்கு குறைவில்லாத கடை குட்டி பாரியின் சேட்டைகள்
என்று இவர்களின் குடும்பத்தோடு இருந்த அற்புத நினைவுகளோடு....
எண்ணங்களால் உணர்வுகளால் பிணைக்கப்பட்ட நம்மை இந்த தூரம் ஒரு போதும் பிரிக்க முடியாது.
பேரன்புடன்
அகத்தீ


Comments