Skip to main content

அகத்தீ புத்தாண்டு கூடுகை

அகத்தீ புத்தாண்டு கூடுகை

கூட்டு குடும்பங்கள் அரிதினும் அரிதாக மாறிய காலத்தில், அறம் சார்ந்த கல்வி, நஞ்சு இல்லாத உணவு, தற்சார்பு பயணம், ஆரோக்கியமான வாழ்வியல் என்ற தேடலில் தாம்பரம் சுற்றுவட்டாரதில் அறிமுகமான தோழமைகள் ஒரு குடும்பமாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பயணிக்கின்றோம். பேரன்பின் மீது ஒரு சமூகத்தை கட்டமைக்க வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் ஆகப்பெரும் விருப்பமாக உள்ளது. எங்கள் சந்திப்பு என்பது எப்போதும் கொண்டாட்டம்தான். இந்த முறை புத்தாண்டை வரவேற்பதற்கான கூடுகையாக இருந்தது.
இந்த ஆண்டு நம் கூட்டு செயல்பாட்டை மேலும் அர்த்தமுள்ளதாக்க ஒரு வெளி கிடைக்கப் பெறுவது கூடுதல் மகிழ்ச்சியே.
இயற்கையின் அன்பால் இணைவோம் !
அகத்தீ
29/12/2024
வாட்சப் குழுவில் இணைய :

Comments