Skip to main content

அகத்தீ - வானகம் பயணம்

 அகத்தீ - வானகம் பயணம்

இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் நினைவிடம்
கடந்த 10 ஆண்டுகளில் எங்கள் நட்பு வட்டாரத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் புத்தாண்டு அன்று வானகத்தில் தான் இருந்திருப்பர். இந்த முறை வானகம் பயணம் திட்டமிடும்போதே கூடுதல் உற்சாகம் தொற்றிக்கொண்டு விட்டது.
"நம் கூட்டு எதிர்காலத்திற்கான சிறார்கள்" என்ற தலைப்பில் கடந்த நவம்பர் டிசம்பரில் நடந்த பயிற்சி வகுப்புகளில் பங்கெடுத்த அகத்தீ மொட்டுக்கள் வானகம் பயணத்தில் பங்கெடுக்க காட்டிய ஆர்வம் திக்கு முக்காட செய்தது. அதற்கு ஏற்றார் போல் 2 நாள் பயணமாக திட்டமிட்டோம்.
முதல் நாள் உலகத்தில் இரண்டாவது பெரிய அலையாத்தி‌ காடான பிச்சாவரத்தில் படகு சவாரி சென்றோம்.
போகும் வழியில் வள்ளலார் என்று அழைக்கப்பட்ட ராமலிங்க அடிகளாரின் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் இருக்கும் வடலூருக்கு சென்று பார்த்தோம். பசியாறுவதற்கு 157 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஏற்றி வைத்த ஆணையா அடுப்பையும் கண்டது நெகிழ்ச்சியாக இருந்தது.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வானகத்திற்கு எப்பொழுது சென்றாலும் தாய் நிலம் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. நம்மாழ்வாரின் உருவப்படத்தை வரைந்த செந்தமிழ் அவர் மகளிடம் கொடுத்தது சிறந்த தருணமாக இருந்தது. வானத்தில் நடக்கின்ற வேலைகளை ஒரு சிறிய பண்ணை வளம் மூலம் தெரிந்து கொண்டது சிறப்பான அனுபவமாக இருந்தது. அகத்தி சிறார்கள் மேடை அலங்காரத்தில் ஈடுபட்டார்கள். மற்றவர்கள் கடை போடுவதை பார்த்து இவர்களும் பனை ஓலையில் கைவினைப் பொருட்களை செய்து விற்பனை செய்தார்கள். அதில் ஒரு பகுதியை வானகத்திற்கு நன்கொடையாகவும் அளித்தார்கள்.
இந்த பயணத்தில் எதிர்பாராமல் சென்ற இடங்களும் சிறப்பானதாக அமைந்தது.
முதல் நாள் மதிய உணவு கங்கைகொண்ட சோழபுரம் கோவில் அருகில் இருந்தது. பலருக்கும் பள்ளி பாட புத்தகத்தில் பார்த்த கோவிலின் முகப்பு படத்தை நேரில் பார்த்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 2017 வானகம் நோக்கிய நடைப்பயணத்தின் போது சிறப்பான ஒரு வரவேற்பை நல்கிய டால்பின் வணிக அங்காடியின் சகோதரர்களை சந்தித்ததும் அவர்கள் நினைவு கூர்ந்து எங்களை இந்த முறையும் வரவேற்ற விதமும் நெகிழ்ச்சியாக இருந்தது. இரண்டாம் நாள் வானகம் அருகில் உள்ள பொன்னியாறு அணையை பார்த்தோம். நிறைவாக போகும் வழியில் தொழுதூர் அருகில் உள்ள எங்களுடன் பயணித்த கண்மணி தோழரின் மாமன்கள் வீட்டிற்கு சென்றது சிறப்பாக இருந்தது. பயணம் முழுவதும் பாட்டு ஆட்டம் வினாடி வினா பொது அறிவு விளையாட்டு என்று பயணத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தனர் எங்கள் சிறார்கள்.
இயற்கையின் அன்பால் இணைவோம் !
அகத்தீ
31 /12/2024 & 01/012025






























































Comments