Skip to main content

சிறுவர்களுக்கான 'வகுப்பறைக்கு அப்பால் ,,, குறு நாடகங்கள்'

 முற்றம் கலைக்குழு மற்றும் கேள் நாடக குழுவும் இணைந்து தாம்பரம் தகை சமூகம் கூடத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இயற்றப்பட்ட குழந்தைகள் பற்றிய குறு நாடகங்கள் கடந்த மாதம் 21/12/2025 ஞாயிறு அரங்கேற்றினர்.

* குழந்தைகளுக்கான வெளி எங்கே போனது ?
* சிறுவர்கள் உலகில் நாம் எங்கே இருக்கிறோம் ?
போன்ற பல கேள்விகளுக்கான ஒரு முயற்சியாக இந்த நாடகம் இயற்றப்பட்டது.
குறிப்பாக கிராமப்புறங்களில் பள்ளிக்கூடங்கள் எப்படிப்பட்டவையாக உள்ளது, மாணவர்கள் எப்படிப்பட்ட கலவையான மனநிலைகளுடன் உள்ளனர், அதில் ஜாதியின் பங்கு என்ன ? என்று நாம் கவனிக்கப்படாத ஆனால் கவனிக்க வேண்டிய பல நிகழ்கால சம்பவங்களை நாடக வடிவில் உயிரோட்டமாக கொண்டு வந்தனர் நாடக கலைஞர்கள்.
அதன் பிறகு வந்திருந்த பார்வையாளர்களுடன் நடந்த உரையாடல் அதை ஒட்டிய ஒவ்வொருவரின் சொந்த அனுபவபகிர்வும் இது போன்ற நாடகங்களின் தேவையையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தியதாக அமைந்தது.
உரையாடல் தொடரும்
கலைகள் அதற்கு வழிவகுக்கும்
அகத்தீ






















Comments