அகத்தீ -சூழலியல் பயிற்சி பட்டறை
மழை வெள்ள பாதிப்பை பற்றி வட சென்னையில் வியாசை தோழர்களுடன் இணைந்து பள்ளி மாணவர்களுடன் ஓராண்டு வெற்றிகரமாக செயல்படுத்திய பயிற்சியின் தொடர்ச்சியே அகத்தீயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை காலநிலை செயல்பாட்டு குழு இதை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து ஒருங்கிணைத்ததின் காரணமாக தமிழக அரசின் கவனத்தை பெற்று பரவலாக ஊடகங்களின் செய்தியாகவும் வந்து ஒரு ஆக்கப்பூர்வமான தீர்வை சென்னை மழை வெள்ளங்களில் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக மாணவர்கள் இதை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து முன்னெடுத்தது இது முதல்முறையாக இருக்கும்.
ஈரநில ஆய்வாளர் பிரசாந்த் மற்றும் 11வது படிக்கும் தினேஷ் இருவரின் வழிகாட்டுதலில் சிறப்பான அமர்வு நடந்தது (07/12/2025).
மிகவும் விரிவாக சென்னை நிலப்பரப்பு, நீர்நிலைகள், மழைக்காலங்கள், நீர் விழிப்பாதைகள், நகரமயமாக்கல், வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் வரைமுறை அற்ற கட்டுமானங்கள் என்று பலவற்றை மாணவர்களுடன் உரையாடி பின்னர் கூகுள் எர்த் ஆப் மூலமாக திசைகள், தூரம், ஆவணப்படுத்துதல் என்று தொழில்நுட்ப உதவியுடன் மழை வெள்ளத்திற்கான காரணங்களை தெரிந்து கொள்ள தொடங்கினார்கள் தாம்பரம் சிறார்கள்.
Comments
Post a Comment