இந்த தை 1, தகை சமூக கூடம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதை ஒட்டி சென்ற மாதம் 14 / 12 / 25 அன்று ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தோம்.
நாம் அனைவரும் கூடி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால், நாம் பேசி, பாடி, பகிர ஏராளமாக உள்ளது வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் அவசியம் வாருங்கள் என்றோம். இந்த அழைப்பே கொண்டாட்டமாக மாற, இதன் நெகிழ்வான வெளிப்பாடாக அகத்தீ சிறார்கள் 'தகை' என்று எழுதிய அவர்களே செய்த கேக் கொண்டு வந்திருந்தனர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் சமீபத்தில் கடந்து வந்த வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். மிகுந்த பேரன்போடும் அக்கறையோடும் நடந்த இந்த உரையாடல், எல்லா மகிழ்ச்சிகளிலும் சவால்களிலும் ஒவ்வொருவரும் உடன் நிற்கிறோம் என்பதை உணர செய்தது. இந்த தருணங்களே இந்த ஒன்றிணைப்பை பல மடங்கு உயிர் பாக்கியது, அழகாகியது.
Comments
Post a Comment