வாருங்கள் GEMsஐ வளர்ப்போம்...
பேருயிர்களின் வாழ்க்கை சிறக்கவேண்டுமெனில்; நன்மை தரும் நுண்ணுயிர்களின் வாழ்கை முதலில் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற புரிதலை திடக்கழிவு மேலாண்மை வகுப்பில் மிகவும் திடமாக எடுத்துக்கூறப்பட்டது. (11/09/22)
உணவுக்கழிவுகளை உரமாக மாற்றி அதை மீண்டும் உணவு உற்பத்திக்கு பயன்படுத்துவது ;
கழிவறைகளை எந்நேரமும் பளபளப்பாக வைத்துக்கொள்ள நவீன அறிவியலின் சுத்தப்படுத்திகள் தீய நுண்மிகளை மட்டுமின்றி நல்ல நுண்மிகளையம் சேர்த்து அழிக்கின்றன எனும் விழிப்புணர்வு ;
நன் நுண்மிகளின் பல்வேறு பயன்பாடுகள் ;
இயற்கையான சுத்தப்படுத்தியை எளிமையாக வீட்டிலேயே தயாரிப்பதற்கான பயிற்சி;
வந்திருந்த பதினைந்திற்கும் மேற்பட்ட நபர்களின் அனுபவ பகிர்வு ;
தம்மை போன்ற ஒத்த சிந்தனை உடையவர்களுடனான சந்திப்பின் திருப்தி;
பெரியோர் மற்றும் சிறியோர்களின் புதிய நட்புகள் ;
சந்தர்ப்ப சூழ்நிலையால் தொடர்ச்சியாக வருபவர்களின் இடைநிற்றல் ;
ஆசிரியர் ஏன் இயற்கை பற்றாளர் ஆனார் எனும் அனுபவப்பகிர்வு ;
இத்தகைய வகுப்புகள் மற்றும் ஒன்று கூடுகையினால் மக்களை இயற்கையை நோக்கி திருப்பிவிடலாம் எனும் அ(க)ண்ணனின் நம்பிக்கை.
போன்ற பல்வேறு கூறுகளை அந்த வகுப்பு தன்னுள்ளே வைத்திருந்தது.
மாலை 4 மணிக்கு தொடங்கி 7 மணி வரை தொய்வுறாமல் வகுப்பு கொண்டு செல்லப்பட்டது அதன் சிறப்பு.
வகுப்பு தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் மூன்று வருடமாக GEMs என அழைக்கப்படும் அந்த நன் நுண்மிகளை பாதுகாப்பாக வளர்த்து வந்த ஒரு இல்லத்தரசியின் வருகை அ(க)ண்ணனையும் ; இஸ்மாயில் அண்ணனையும் சிறுது நிமிடங்கள் வியப்பில் ஆழ்த்தியது. ஏனெனில் இதை குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் இஸ்மாயில் அண்ணனால் சூழ்நிலையால் இரண்டு முறை கைவிடப்பட்டு பின் முறைப்படுத்தப் பட்டுள்ளது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். அவ்வாறு இருக்க; மூன்று வருடங்களுக்கு முன் வாங்கி சென்ற குடுவையில் மூடி, அதை சுற்றி ஒட்டப்பட்ட தாள் , நுண்ணுயிரிகள் என அனைத்தும் ஆரோக்கியமாக உள்ளதை கண்டு வியப்பில் ஆழாமல் என்ன செய்வது !! ஆனால் அவரை வகுப்பின்போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக காட்டமுடியவில்லை எனும் வருத்தத்துடன் அன்றைய தினம் முடிந்தது... - சத்யா
Comments
Post a Comment