அகிம்சை சந்தை.
ஒரு பொருளின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் முடிவு; இன்றோ அல்லது நாளையோ ; நமக்கோ அல்லது பிறருக்கோ எவ்வகையிலும் பாதிப்பு அளிக்காதவையாக இருக்க வேண்டும் என விழிப்புணர்வு அளிக்கவே இந்த அகிம்சை சந்தை நடத்தப்பட்டதாக நான் உணர்கிறேன்.
ஐந்து நாட்களாக நடத்தப்பட்ட சந்தையில் ; நான் பொருட்கள் எதையும் நுகரவில்லை ; மாறாக பல்வேறு அனுபவங்களை நுகர்ந்தேன். அவைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட விற்பனை குடில்கள் (stalls) அங்கு அமைக்கப்பட்டிருந்தன.
இயற்கையான நஞ்சில்லா உணவு பொருட்கள்
கைத்தறி ஆடைகள்
புத்தகங்கள்
இயற்கையான அழகுசாதன பொருட்கள்
குடிசை தொழில் பொருட்கள்
வீட்டை அழகாக்கும் பொருட்கள்
கைப்பைகள்
இயற்கை மண்புழு உரங்கள்
பலகாரங்கள்
மரபு கட்டிட கலை ஆவணங்கள்
வெளி மாநில சமூக ஆர்வலர்களின் முன்னெடுப்புகள்
இளம் அரசியல் உணர்வாளர்கள்
என என் நினைவில் நிற்காத ஏராளமான பொருட்கள் அங்கு கொண்டுவரப்பட்டிருந்தின.
தினமும் கருத்தரங்குகள் ,வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்தவர்களின் அனுபவ பகிர்வுகள், மாலையில் நிபுணர்களின் சொற்பொழிவுகள் ,கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகளுடன் தினமும் சந்தை நடந்தது.
நான் முதன் முதலாக கண்டவை.
1. இத்தகைய சந்தை அனுபவமே எனது முதல் அனுபவம்.
2. விடுதி (Lodge) அறை மெத்தை அனுபவம்.
3. தமிழகத்தின் நிதியமைச்சர்.
4. இந்து நாளிதழின் நடுப்பக்க எழுத்தாளர் சமஸ்.
5. முனைவர் சுல்தான் இஸ்மாயில்.
6. எனக்கு பெயர் மறந்துபோன water man of India .
7. சில வலை ஒளி (youtube) பிரபலங்கள்.
8. பறக்கும் கேமரா (Drone camera).
9. முன்னாள் பூடான் பிரதமர்.
10. Master of social work முடித்திருந்தால் அரசு சாரா அமைப்புகளில் (NGO) நிறைய வேலைவாய்ப்புகள் உண்டு எனும் புது பட்டறிவு.
11. படையல் சிவா அவர்கள் தயாரிக்கும் சமைக்காத உணவு வகைகள்.
12. ஜெய் ஜகத் எனும் புதிய விதமான உற்சாக முழக்கம்.
13. நடமாடும் கழிவறை.
14. கடைசி வரை நான் சுற்றி பார்க்காத காந்தி மியூசியம்.
15. காந்தியின் ராட்டையில் நூல் தயாரிக்கும் முறை.
16. அனுராதா சங்கர் (முன்னாள் IPS).
என பல்வேறு நிகழ்ச்சிகளையும், நபர்களையும் நான் முதன் முதலில் கண்டேன்.
அங்கு வந்திருந்த பழைய நட்புகள்.
வருண் (காஞ்சனா தோழர் மகன்).
இஸ்மாயில் அண்ணா (GEMs ஆராய்ச்சியாளர் ).
வினோத் அண்ணா (தன்னாட்சி அமைப்பு).
செல்வ கார்த்திக் அண்ணா(இயற்கை விவசாயி ).
மணி அண்ணா (அகத்தீ).
சிவகுமார் அண்ணா (தன்னாட்சி அமைப்பு).
அங்கு கிடைத்த புதிய நட்புகள்
பரத் தோழர் (மரபு கட்டுமான நிபுணர்).
மது தோழர் (மதுரைவாசி).
வித்யா (பேராசிரியை MSW).
விஷ்ணு அண்ணா (சந்தை ஒருங்கிணைப்பாளர்-இவர் அர்ப்பணிப்பில் வியந்தேன்).
சிவகாமி தோழர் (சந்தை ஒருங்கிணைப்பாளர்).
திலக் அண்ணா (சேவை கரங்கள் அமைப்பின் பங்காளர்).
மறுமுறை பார்த்தால் ‘’உங்களை மதுரை அகிம்சை சந்தையில் பார்த்தேனே” என நினைவூட்டும் ஏராளாமான நபர்கள்.
அந்நிய மொழிகளின் நிலைத்தன்மை.
நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பன்மொழி மக்கள் ஒன்றாக திரண்டு இந்த சந்தையில் பங்கேற்றனர் எனினும் நாம் எந்த மொழி மண்ணில் நிற்கிறோம் என்பதை அவர்கள் மறக்கும் அளவிற்கு தமிழ் மொழி இடம் பெறவில்லை என்பது எனக்கான வருத்தம். மொழியின் பயன்; புரிதலை ஏற்படுத்துவது எனும் பகுத்தறிவில் சிந்தித்தாலும் தமிழ் மண்ணில் தமிழ் மூதாட்டியை வாயிலில் மட்டும் நிறுத்திவிட்டு மற்ற மொழிக்கன்னிகள் மேடையில் சிங்காரித்து கொண்டதை பார்க்கும்போது சற்று வருத்தமாக இருந்தது.
அந்த வருத்தத்தை சீற்றமாக்கி அ(க)ண்ணன் ஒருங்கிணைப்பாளர்களிடம் காட்டி ; அதனை செயலாக்கும் விதமாக அட்டையில் அகிம்சை சந்தை என தமிழில் பதித்து மேடை அருகில் ஒட்டினார்
எனது பங்களிப்பு.
மூன்றாம் நாளில் நடமாடும் கழிவறையின் பராமரிப்பை கண்காணிக்கும் பொறுப்பு எனக்களிக்கப்பட்டது. அதனை முடிந்தவரை செம்மையாக செய்ய முயற்சித்தேன்.
ஐந்தாம் நாளில் மனம் அந்த சந்தையிலிருந்து ஒரு வித காந்த வினையை போல் விடுபட்டு ரயில் ஏறி தாம்பரம் வந்தடைந்தது. - சத்யா
Comments
Post a Comment