Skip to main content

 அகத்தீ குடும்பங்களின் ஒன்று கூடுதல்.

தாம்பரம் அளவில் தொடர்ச்சியாக நஞ்சில்லா உணவு பொருட்களை நேரடியாக விவாசாயிகளிடம் இருந்து வாங்க விருப்பம் உள்ளவர்கள்...
சுற்றுசூழல் பாதுகாப்பு, சூழலியல் பயணம், குழந்தைகள் நலன், ரசாயணம் இல்லா வீடு, ஆக்கபூர்வமான சமூக செயல்பாடுகளில் ஆர்வம் உள்ளவர்கள்...
குடும்பமாக இணைந்து நம்பிக்கை அளிக்கும் சமூகமாக உருவெடுத்து வரும் தலைமுறைக்கு முன் உதாரணமாக திகழ சந்திப்போம்... என அ(க)ண்ணண் அழைப்பு விடுத்தபோது பத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் ஒன்று கூடுகை (17/09/22) சனிக்கிழமை அன்று கூட்டப்பட்டது.
நஞ்சற்ற உணவு பொருட்கள் குறித்த விழிப்புணர்வுடனும் ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலுடனும் அது நடந்தது.
"இந்த மாதத்தில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய நிகழ்வை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள் "என்று கூறியவுடன்; தோழர்கள், தங்களின் எண்ண அலைகளை மடைகளிலிருந்து விடுவித்தனர் . ஒவ்வொருவரும் தனித் தனி கோணங்களில் நின்ற படி தங்களின் சமூகம் சார்ந்த வேதனைகளை பகிர்ந்துகொண்டனர்.
 எங்கோ ஒரு முகம் தெரியாத விவசாயிக்கு பொருட்கள் வாங்கி அவர்கள் அளித்த ஆதரவு .
 முடிந்தவரை இயற்கையை நோக்கி திரும்ப அவர்கள் செய்யும் முயற்சி.
 சவுக்கு சங்கர் கைதும் முரணும்.
* தாம்பரம் அருகில் உள்ள மணிமங்களத்தில் சாலையின் இரு பக்கத்தில் ரொம்ப அழகாக பசுமை போத்தி இருந்த ஆயிர கணக்கான மரங்கள் (குறிப்பாக ஏராளமான புளிய மரங்கள்) சில ஆண்டுகளில் மட்டும் வெட்ட பட்டதின் கொடுமை.
 இந்தியாவின் இதய பகுதியான சத்தீஸ்கரில் அஸ்தியோ ஆரண்ய காடுகளில் சுரண்டப்படும் நிலக்கரி வளங்கள் குறித்த விவாதம்.
 மீட்டுருவாக்கம் செய்ய முடியாத சூடாகும் பூமி பற்றிய கலந்துரையாடல்.
 பில்கிஸ் பானு வழக்கும்-தீர்ப்பும்.
 மக்களை இயற்கையை நோக்கி திரும்ப நீண்ட நாட்களுக்கு முன் அ(க)ண்ணன் தயாரித்த சிந்திக்க கூடிய கேள்விகள் சார்ந்த உரையாடல்.
* தாம்பரம் அருகில் அகரம் தென், பொன்மார், போன்ற கிராமங்களில் குடிமனைகளாகவும், அடுக்கங்களாகவும் அசுரவேகத்தில் சில ஆண்டுகளில் மாறிய விவசாய நிலங்கள்.
 இடையிடையே சுட்டி குழைந்தைகளின் இடையூறுகள்.
 திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க ; ஆதரவு கையொப்பம்.
 சற்று முன்பு வரை நன்றாக வேலை செய்துவிட்டு; திடீரென பழுதாகிய எடைபார்க்கும் கருவி.
 எங்கோ இருந்தபடி எடை பார்க்கும் கருவியை அளித்த கணேஷ் அண்ணனின் துரித உதவி.
 எனக்கு மட்டும் அதிகம் கிடைத்த கேசரி.
 எப்போதும் நீண்ட நேரம் உரையாடிவிட்டு செல்லும் பாலமுரளி தோழர் குடும்பத்தின் பிரிவு உபச்சார கையசைவு.
என அன்றைய தினம் நிறைவாக முடிவடைந்தது. - சத்யா














Comments