Skip to main content

 நம்ம சந்தை ...

ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை தாம்பரத்தில் அகத்தி தோட்டத்தில் நம்ம சந்தை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது ... கடந்த வாரமும்
சந்தை சிறப்பாக நடந்து முடிந்தது.
பாதுகாப்பான உணவு மற்றும் அதில் நுகர்வோரின் பங்களிப்பு குறித்து தன்னுடையான அனுபவங்களை ,நாம் அனைவரும் எடுத்து செல்ல வேண்டிய செயல்பாடுகள் குறித்து அனந்து அண்ணன் பகிர்ந்து கொண்டார் ..நிகழ்வின் ஒரு பகுதியாக கரகாட்டம் நடைபெற்றது ..நாம் மறந்த ,நம்மிடமிருந்து பிரிக்கப்பட்ட நமது மண் சார்ந்த கலைகளை மீண்டும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தையும் அக்கா பகிர்ந்து கொண்டார்.தோழர் ஸ்ரீ தான் முன்னெடுக்க இருக்கும் "இனிது" குறித்து மக்களுடன் பகிர்ந்துகொண்டார்.. குழந்தைகளுடான கதை சொல்லலும் ,விளையாட்டுகளும் ஒருபுறம் நடந்து கொண்டு இருந்தன ..இந்த முறை கூடுதலாக சிலர் முதல்முறையாக கடை வைத்திருந்தனர் ...மதியம் சிறுதானியத்தால் செய்யப்பட்ட உணவுகள் அளிக்கப்பட்டது ...
பல்வேறு நபர்களின் கூட்டு உழைப்பினாலும் ,மக்களின் தொடர்ச்சியான பங்களிப்பினாலும் சந்தையை ஒவ்வொரு மாதமும் சிறப்பாக எடுத்து செல்ல முடிகிறது .தற்சார்பு பொருளாதாரத்தின் முன்னெடுப்பாக இந்த சந்தையை பார்க்கிறோம்.சந்தையை முன்னெடுக்கும் தோழர்கள் நுகர்விலிருந்து விடுபட்டு அறத்தை முன்னெடுக்கும் ஒரு பொருளாதாரத்தை நோக்கி பயணப்பட தொடங்கி உள்ளனர்.சந்தை பல்வேறு வடிவங்களில் எல்லா மக்களும் ஒன்றுகூடும் ஒரு நிகழ்வாக இருப்பதால் பலதரப்பட்ட மக்களும் குடும்பத்துடன் வந்து ஆர்வத்துடன் பங்கெடுப்பதை பார்க்க முடிகிறது ...
அடுத்த சந்தையில் ஒன்றுகூடுவோம் ..




















Comments