அகத்தி நம்ம சந்தை ...நாளை தாம்பரத்தில் ..சந்தையில் இடம்பெறுபவை ..
பூங்கார் ,மாப்பிள்ளை சம்பா ,சீரக சம்பா போன்ற பாரம்பரிய அரிசிவகைகள் ,தினை, சாமை உள்ளிட்ட சிறுதானியங்கள் ,நாட்டு சர்க்கரை ,செக்கில் அரைத்த கடலை எண்ணெய் மற்றும் நல்ல எண்ணெய் உள்ளிட்ட இயற்கை வேளாண் பொருட்கள் சந்தையில் கிடைக்கும் ...
சூழலியல் ,வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் சந்தையில் கிடைக்கும் ...
காய்கறி விதைகள் நம்மை சந்தையில் கிடைக்கும் ...
மண்பாண்ட பொருட்கள் சந்தையில் வைக்கப்பட்டிருக்கும் ..வாங்கி கொள்ளலாம் ..
மறுசுழற்சியில் உருவாக்கப்பட்ட துணிப்பைகள் சந்தையில் கிடைக்கும் ..
இயற்கை சோப்புக்கட்டிகள் சந்தையில் கிடைக்கும் ..
சிறுதானியங்களில் செய்யப்பட்ட கார வகை திண்பண்டங்கள் ,கருப்பட்டியில் செய்யப்பட்ட இனிப்பு திண்பண்டங்கள் சந்தையில் கிடைக்கும்
சிறுதானியம் கொண்டு செய்யப்பட்ட உருண்டைகள் ,பச்சைப்பயிறு மற்றும் எள்ளு உருண்டைகள் சந்தையில் கிடைக்கும் ..
மரக்கன்றுகள் சந்தையில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் ..
மூலிகை தேநீர் கிடைக்கும் ..நீங்கள் தினசரி வீடுகளில் குடிப்பதற்கான செயல்முறையையும் கேட்டு பெறலாம் ..
பனையில் செய்யப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் ..
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கீரைகள் சந்தையில் கிடைக்கும் ..
வீடுகளில் தோட்டங்கள் அமைப்பது குறித்தான ஆலோசனைகளை கேட்டு பெறலாம் ...
கருத்துரை :
இந்த வாரம் மறைநீரும் ,நுகர்வோர் வாழக்கை முறையும் என்ற தலைப்பில் சூழலியலாளர் நக்கீரன் ஐயா நம்முடன் உரையாற்ற உள்ளார் ..
சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசியில் செய்யப்படும் உணவும் மதியம் உண்டு ...
உங்கள் குழந்தைகளை சந்தைக்கு அழைத்து வாருங்கள் ..அவர்களை மகிழ்விக்க ,குழந்தைகளுடன் இயங்கும் "இனிது " குழுவினர் உள்ளனர் ..
விவசாயம் செய்யும் ஆர்வம் உள்ள நண்பர்களுக்கான ஆரம்பகட்ட ஆலோசனைகள் ,வார இறுதியில் விவசாயத்தில் களப்பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் அதன் குறிதான் தகவலை சந்தையில் பெறலாம் ..
சந்தையில் ஒரு பகுதியில் பறை இசை பயிற்சி நடைபெறும் ..விருப்பமுள்ளவர்கள் அதில் பங்கு பெறலாம் ...
எல்லாமும் கலந்த ,வருகை தரும் அனைவரும் பயன்பெறும்வகையில் நம்ம சந்தையை திட்டமிட்டு உள்ளோம் ..நாம் ஒன்றுகூடுதலுக்கான இடம் தான் சந்தை ..
Comments
Post a Comment