பட்டாசுகளை தவிர்ப்போம் !
அகத்தீ - நிகழ்வு
இயற்கையை பாதுகாப்போம் !
தீப ஒளி திருநாளாக கொண்டாடுவோம் !
இன்று காலை சிட்லபாக்கம் ஏரிக்கரையில் குழந்தைகளுடன் பட்டாசுகளால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி இயற்கையை பாதுகாக்க வேண்டியதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தோம்.
இதை உள்வாங்கிய சிறார்கள் அவர்களே துண்டறிக்கையை மக்களிடம் விநியோகித்தார்கள்.
பட்டாசை வெடிப்பவர்களுக்கு மட்டுமே அது மகிழ்ச்சியை கொடுக்கும் மற்றவர்களுக்கு அதிர்ச்சியையும் இன்னல்களையும் கொடுக்கும்.
"மண்ணில் விளையாடும் போது எவ்வளவு பேருக்கு மகிழ்ச்சி ?" என்றேன்
எல்லோரும் கை தூக்கினார்கள்
அப்போ தீபாவளியை ஒட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை விதை பந்து செய்யலாமா என்றேன்.
செய்யலாமே என்று எல்லோரும் ஒருமித்த குரலோடு சொன்னார்கள்.
Seed bomb இருக்க Atom bomb எதற்கு ?
வெடிக்கு விடை கொடுப்போம் வெடி சிரிப்புக்கு மட்டும் இடம் கொடுப்போம்
வரும் ஞாயிறு 23/10/22 விதைபந்து செய்யும் நிகழ்வு. சிட்லபாக்கம் ஏரி கரை
Comments
Post a Comment