Skip to main content

 தன்னலமற்ற செயல்பாட்டுக்கான ஒரு முன்னோடி

தன்னலமற்ற தன்னார்வ செயலால் மட்டுமே தன்னகத்தே ஏராளமானவர்களை வென்றெடுத்தவர் எங்கள் தோழர் கணேஷ்.
"தோழர் நாம் முன்னெடுத்து செய்கின்ற வேலைகளில் நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அப்படி வெற்றி பெற்றால் அது நம்முடையதாக மட்டும் இருக்காது. எங்கோ நம்மைப் போன்று செய்ய வேண்டும் என்று விரும்பும் ஒரு நல்ல உள்ளத்தினுடைய வெற்றியாகவும் இருக்கும். நாம் செய்கின்ற வேலையில் தோல்வியோ அல்ல முன்னேற்றமோ இல்லாமல் இருந்தால் நாம் ஒரு தவறான உதாரணமாக நம்மைப் போன்று செய்ய முன் வருபவர்களுக்கு சொல்லிக் காட்டப்படும். அதுவே அவர்களுக்கு தடையாக ஆகிவிடும். ஆக அந்த பொறுப்புணர்ச்சியோடு நாம் தொடர்ச்சியாக செயல்பட வேண்டும் தோழா...."
இதுவே நான் இயங்குவதற்கும் 'அகத்தி'யின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் பின்னால் உள்ள மந்திரச்சொல்.
குழந்தைகளுக்காகவும் பெரியோர்களுக்காகவும் அவர் காட்டும் அக்கறையும் கரிசனமும் அளவிட முடியாது. அப்படிதான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் ஏதோ ஒரு விதத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்காகவும் பெரியவர்களுக்காகவும் ஒவ்வொரு தீப ஒளி திருநாளன்று தோழரின் முன்னெடுப்பில் அவர்களுக்கான புத்தாடை இனிப்புகள் வாங்கி கொண்டு சென்று அந்த நாளை அவர்களுடன் செலவிடுவோம். இந்த முறையும் ஒரு நிறைவான நாளாக அமைத்துக் கொடுத்த கணெஷ் தோழருக்கு எங்கள் அன்பு கலந்த வாழ்த்துக்கள். - பாரதி கண்ணன்












































Comments