Skip to main content

 அகத்தீ - உரையாடல்

காந்தாரா

கர்நாடகா மாநிலத்தில் வாழ்கின்ற ஒரு பழங்குடி சமூகத்தின் நிலத்திற்கான போராட்டமே இந்த படம். நிலத்தை பணமாக பார்க்கத் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து விளிம்பு நிலை மக்கள் மீதான அடக்குமுறைகள் எப்படி பல பரிணாமங்களை எடுக்கிறது என்பதை விவரிக்கிறது 'காந்தாரா'. சுவாரஸ்யமான திரைக்கதை மூலம், வணிக ரீதியான திரைப்படங்களுக்கு உரிய எல்லா அம்சங்களும் இருந்தாலும் மிக முக்கியமாக நில உரிமை மீதான உரையாடலை ஆழமாக ஏற்படுத்துகிறது.
நாட்டார் தெய்வ வழிபாடு, அரசு வேலை கிடைத்த அன்றே தன்னுடைய சொந்த மக்களை நிலத்திலிருந்து அப்புறப்படுத்த வரும் இளம் பெண், வேகமாக மாறிவரும் நவீன காலகட்டத்தில் மனிதனுக்கும் வனத்திற்கும் உள்ள உறவு, பழங்குடிகளின் வாழ்க்கையில் பன்றியின் முக்கியத்துவம், அரசு அதிகாரிகளின் அணுகுமுறைகள் என்று பல முக்கியமான அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
"சட்டத்தை மீறி காட்டுக்குள்ள இருக்க நீங்க இங்க இருந்து வெளியேறனும்" அப்படின்னு சொன்ன காட்டிலாக அதிகாரி கிட்ட "உங்க சட்டமும் அரசும் உருவாகுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னாடியே நாங்க இங்கதான் இருக்கோம், இங்க உள்ள வரணும்னா நீங்கதான் முதல்ல எங்ககிட்ட அனுமதி வாங்கிட்டு வரனும்... " என்று கதாநாயகன் சொல்லும் பதில் போன்ற ஏராளமான வசனங்கள் நம்மை சிந்திக்க கூடியதாக இருந்தது‌.
தாம்பரம் அகத்தி குடும்பத்தில் இருந்து 20 பேர் வரை கடந்த வியாழக்கிழமை சென்று 'காந்தாரா' திரைப்படத்தை பார்த்தோம். பார்த்த பிறகு பல மணி நேரம் இதை ஒட்டிய ஆழமான உரையாடலும் தொடர்ந்தது.











Comments