Skip to main content

 சிவராத்திரி ஒன்று கூடல்

கடந்த சனிக்கிழமை (18/2/2023) அன்று ரேஷ்மா தோழர் வீட்டில் நடந்த உரையாடல்.
நாம் எல்லோருக்கும் ஒரு விவசாய நிலம் ஆவது வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது அது ஒரு தனி மனிதராக வாங்குவதை விட ஒரு குழுவாக சேர்ந்து வாங்குவது நல்லது என்று நம் அனைவரின் எண்ணம்.
நாம் இதை வெறும் விவசாயத்துக்கு மட்டுமில்லாமல் அது ஒரு சோசியல் ,என்விரான்மென்டல், கல்ச்சுரல், பொலிடிகல்.. இந்த எல்லா விஷயத்தையும் அடக்கின ஒரு இடமாக இருக்கணும் என்று பேசியபோது அதுக்கும் எல்லாரும் சரி என்ற போல தான் சொன்னாங்க. அது மட்டும் இல்லை அதை சுத்தி நிறைய விஷயங்களை பார்க்க வேண்டியது இருக்கு அங்க இருக்கிற நீர் ஆதாரம் ,நீரோட்டம், மண் பருவம், கால்நடை அங்கு இருக்கிற மக்கள் இதெல்லாம் தெரிந்து கொள்வதற்காக நமக்கு குறைந்தது ஒரு வருஷமாவது ஆகும் .இது புரிஞ்சுகிட்டா தான் எதிர்காலத்தை தெளிவாக நம்மால் யோசிக்க முடியும் ஒரு குழுவாக செயல்பட முடியும் அங்கு என்ன செய்யப் போறோம் எப்படி வேலி கற்றது ,வீடு கட்டுவது என்ன வேலி கட்ட போறோம் என்ற எல்லாத்தையும் நம்ம ஒரு தெளிவோடு யோசிக்கணும்.
இந்த விஷயங்கள் எல்லாம் மட்டும் இல்லாம நமக்கு இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டியது இருக்கு அங்க நமக்கு சில கருவிகள் வாங்க வேண்டியது இருக்கு சின்னதா குடோன் மாதிரி அமைக்கணும் ,தங்கறதுக்கு சின்னதா ஒரு இடம் ரெடி பண்ணனும். பயோ டாய்லெட் .... இப்படி எல்லாம் கட்ட வேண்டிய வேலை இருக்கு அங்க இடத்தை சரி செய்ய தேவையான இந்த கட்டுமானத்தைப் பற்றி தெரிஞ்ச ஒரு நபர கூட்டிட்டு வந்து இதெல்லாம் நம்ம குழுவாக செயல்படுத்தனும்.
இதுக்கான அடுத்தகட்ட நடவடிக்கையா நம்ம செய்ய வேண்டியது இந்த இடத்தை வாங்குவது என்ன வேலை இருக்குன்னு ஒரு டீடைல் ஆக்டிவிட்டி ரிபோட்டா ரெடி பண்ணனும் அதுக்கு ஒரு மூணு முக்கியமான விஷயங்கள் தேவைப்படுது.
அடுத்த கட்டத்திற்காக......
1. முதல் விஷயம் அந்த இடத்தில் லீகல் ஒபினியன் கேட்கிறதா இருக்கட்டும், சர்வே பாக்கறதா இருக்கட்டும் இல்ல ரெஜிஸ்ட்ரேஷன் எப்படி பண்ண போறோம் அப்டின்றதா இருக்கட்டும் ,இல்ல லேண்ட் ஓனர் கிட்ட வந்து பேசுறதா இருக்கட்டும் இது எல்லாமே நம்ம சரியான முறையில் யோசிச்சு ஒரு தெளிவான ரிப்போர்ட் ரெடி பண்ணனும்.
2. இரண்டாவது விஷயம் ஒரு நபருக்கு 21 சென்ட் வாங்கினா தான் அது விவசாய நிலமா யூஸ் பண்ண முடியும்னு சொல்லி இருக்காங்க அதை நம்ம அடுத்த கூட்டத்தில் கூடும் பொழுது யாரு எவ்ளோ வாங்க போறாங்க அப்படின்றத தெளிவா தெரிவிச்சிட்டோம்னா எல்லாருக்கும் சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
3. மூன்றாவது விஷயம் நாம் ஏன் இதை வாங்கணும் ,எதுக்காக வாங்கணும் அப்படிங்கற விஷயத்தையும் எதுக்காக காமன் விதிமுறைகள் இருக்கணும் அப்படிங்கற விஷயத்தையும் விரிவா நாம் தெரிவிச்சோம்னா நல்லா இருக்கும்.
நம்மளோட அடுத்த சந்திப்பில் நாம் இந்த மூன்று விஷயங்களும் வந்து எல்லாரும் தெளிவான ஒரு உரையா கொடுத்துட்டோம்னா எல்லாருக்கும் ரொம்ப சுலபமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
- தோழர் கோமதி













Comments