சூழலியல் பயணம்:
8 ஏப்ரல் 2023
பெருமாள் தோழரின் பனை தோட்டம்:
" ஒரு மனிதன் நிறைவாக வாழ என்னவெல்லாம் தேவை என்று என்னை கேட்டால் நான் ஒரு பெரிய list-ஏ சொல்வேன்.... ஆனால் பெருமாள் தோழரின் பனை தோட்டம் அந்த எண்ணத்தை உடைத்தது... எவ்வளவு எளிமையான அமைதியான இடம். Consumerism வாடை இல்லாத ஒரு வாழ்விடம். அங்குள்ள அனைவரின் முகத்திலும் மனதிலும் மகிழ்ச்சி இருந்தது. நுகர்தலுக்கும் சந்தோஷத்துக்கு சம்பந்தம் இல்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
தெருவுக்கு தெரு கருப்பட்டி காபி கடைகளும், எங்கு பார்த்தாலும் கருப்பட்டி விற்பனை நிலையங்களும், கருப்பட்டி இனிப்பு கடைகளும் இப்போது காண முடிகிறது. எதுக்கு டா இந்த கருப்பட்டி நு சொன்னாலே எவ்ளோ விலை சொல்றாங்க என்று நினைத்தது உண்டு ...ஆனால் 1kg கருப்பட்டி செய்வதற்கு பின்னால் இருக்கும் உழைப்பை, வியர்வையை பார்த்த பின்பு அந்த கேள்வி மறைந்து போனது. ஆனால் தோழர் விளக்கிய செய்முறையை வைத்து யோசித்தால் market இல் கிடைப்பது உண்மையாகவே கருப்பட்டி தானா என்கிற சந்தேகமும் வருகிறது. சரி கருப்பட்டிய விடுங்க பனை தேன் தெரியுமா? பனம்பழம் பற்பசை தெரியுமா? பனை பஞ்சு band-aid தெரியுமா? பனை ஓலை இல் சந்திப்பு அட்டை தெரியுமா? பனை ஓலையில் laser அச்சிடுதல் தெரியுமா? chocolate, பர்பி, பனம்பழம் அரிசி மாவு, பனை சக்கரை என்று இன்னும் நிறைய item இருக்கு... தெரிஞ்சுக்கணும் என்றால் வாங்க பழகலாம் என்று கற்று கொண்ட மொத்த வித்தையும் நம்முடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறார் அவர். இவரல்லவா " make in India" வை உண்மையாக செயல்படுத்தும் சிலரில் ஒருவர். இவர் தானே Village விஞ்ஞாணி. பேசாமல் அவரிடம் அப்பரசட்டிகளாக சேர்ந்து விடலாம் போல.
பதநீர்: அதை பத்தி சொல்லியே ஆகனும்...எவ்ளோ குடிசோம் என்றே தெரியல...அவ்ளோ குடிச்சோம். Tree to tumbler தான். அப்படி ஒரு சுவை. எங்களோட வந்த சிலர் பதநீர் குடிப்பதற்காகவே மதிய உணவு சாப்டவே இல்ல.
அணிநிலா, மகிழினி, மற்றும் பெருமாள் தோழரின் அம்மா பற்றி சொல்லியே ஆகனும்...2 குழந்தைகளும் அழகாக அவர்கள் வேலையை அமைதியாக தொடர்ந்து செய்து கொண்டு இருந்தார்கள். Instructions சொல்லல, எதுவுமே இல்ல.... அவர்களாகவே இருந்தார்கள்....அது மிக அழகு. வார்த்தை பரிமாற்றம் இல்லாமலேயே அங்கே நடக்க வேண்டியவை நடந்து கொண்டு இருந்தது. அது தான் radical unschooling போலும். அம்மா அவர்கள் அதை விட அழகு. மகனின் முடிவை தன் முடிவாக ஏற்று அதற்கு அவர்களால் முடிந்த அனைத்து ஆதரவையும் இன்முகத்தோடு செய்கிறார்.
இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம்ல, இன்னும் கொஞ்சம் கூட பதநீர் குடிச்சு இருக்கலாம்ல, பனை மரம் ஏறி பாத்து இருக்கலாம்ல. இன்னும் பல "இருக்கலாம்ல" இல் முடிந்தது அன்றைய தினம்." - ரேஷ்மா
பெருமாள் தோழருடைய
வாழ்க்கை பயணத்தை பற்றிய சிறிய அறிமுகம்.... பழைய பதிவில் இருந்து
__________
இதுபோன்ற பயணங்களில் மற்றும் தாம்பரம் பகுதியில் நடக்கும் நிகழ்வுகளில் பங்கெடுக்க ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் இணைப்பில் இணையவும்.
Comments
Post a Comment