அகத்தீ
சூழலியல் பயணம்:
8 ஏப்ரல் 2023
ஆதினி தோட்டம்:
"ஊர் திரும்புதல், இயற்கை விவசாயம் செய்தல், தோட்டம் அமைத்தல்....இந்த சொற்றொடர்கள் கொரோனா காலத்திற்கு பிறகு அதிகமாக கேட்கிறேன்.... கேட்கும் போது இது போன்ற வாழ்கையை நாமும் தேர்ந்து எடுத்தால் என்ன என்று தோன்றும். நிலம் வாங்கி, மரபு வீடு கட்டி, காய்கறி தோட்டம், பழ தோட்டம் வைத்து மாடு வாங்கி விவசாயம் செய்து என்று மனதில் பட்டியல் நீண்டு கொண்டே போகும். கண் மூடி யோசித்தால் இன்றைய வானகம் போல நானே என் ரசனைக்கு ஏற்ப customize செய்து கனவு காண்பேன்... நன்றாக தான் இருக்கும். கண் திறந்ததும் தான் என் யதார்த்த நகர வாழ்கை கண் முன் விரியும்....பிறகு அவ்ளோ தான்...run run...life is a race போல ஒரே சக்கர வாழ்க்கை தான். நிலம் வாங்கிவிட்டால் போதும் நினைத்ததை செய்திடலாம் என்ற எண்ணம் என்னை போல பலருக்கும் உண்டு. ஆனால் matter ஏ அங்கே தான் அரம்பிகிது என்று பிறகு தான் புரிஞ்சுது. அந்த புரிதலை தெளிவாக கண் முன்பு காட்டியது ஆதினி farm. நிலத்தை திட்டமிடல், நீர் வள மேலாண்மை, மரபு கட்டுமான தேர்வு, ஊரோடு ஒன்றுதல் என்று பல நடைமுறை சிக்கல்களை தாண்டி குடும்பமாக இணைந்து லாவண்யா மற்றும் ஹேம்னாத் தோழர்கள் மற்றும் அவர் குடும்பம் வந்தவாசி அருகே உருவாகியுள்ள இந்த தோட்டம் மிகவும் அழகு. இருவரும் எங்கள் அனைவரையும் இன்புற வரவேற்று எங்கள் அனைத்து சந்தேகங்களையும் விளக்கினார்கள். அங்கு இருந்த போது எங்கள் வீடு போல உணர்ந்தோம். இருவருக்கும் மிக்க நன்றி. சில வருடங்கள் பிறகு அந்த தோட்டத்தின் பரிணாமத்தை காண வேண்டும் என்று தோன்றுகிறது.
"
- ரேஷ்மா
இதுபோன்ற பயணங்களில் மற்றும் தாம்பரம் பகுதியில் நடக்கும் நிகழ்வுகளில் பங்கெடுக்க ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் இணைப்பில் இணையவும்.
Comments
Post a Comment