Skip to main content

சிறார் களம் கதைக்களம் பொம்மைகள் செய்வது விளையாட்டுகள் நிழல்பாவை கூத்து

 சிறார் களம்

கதைக்களம் | பொம்மைகள் செய்வது |விளையாட்டுகள் | நிழல்பாவை கூத்து
இந்த மாதத்தின் முதல் நாள் இனிதாக தொடங்கியது. 20 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மோகன் தோழர் மற்றும் சிபி தோழர் அழகாக ஈடுபடுத்தினா். இசை, பாடல், கதை, ஓவியம், விளையாட்டு என்று சுவாரசியமாக இருந்தது. பல்சுவை மதிய உணவுக்கு பின்பு சிறார்கள் நிழல் பாவைகள் செய்வதில் தீவிரமாக களம் இறங்கினார்கள்... பெற்றோர்கள் நாங்கள் அறிமுகமும் சிறிய விவாதமும் செய்தோம். அதன் பின்பு குழந்தைகளின் கதைகள் அருமையான அழகான நிழல் பாவைகளாக எங்கள் கண் முன்னே வலம் வந்தது. அவர்களின் படைப்பாற்றல் மற்றும் குழுவாக வேலை செய்யும் திறன்கள் மிக அற்புதம். இது போல மென்மேலும் நிகழ்வுகள் தொடர ஆசையாக உள்ளது. ஒத்த எண்ணமுடைய பெற்றோர்கள் இணைந்து முயற்சித்தால் இன்று போல அல்லது இன்றை விட அனைவரும் பயனுறும் வண்ணம் நிகழ்வுகளை செவ்வனே நிகழ்த்தலாம். - ரக் ஷனின் அம்மா
தாம்பரம் பகுதியை ஒட்டி நடைபெறும் குழந்தைகளுக்கான நிகழ்வுகளில் ஆர்வம் உள்ளவர்கள் கீழே உள்ள whatsapp குழுவில் இணையலாம்.
அகத்தி
இயற்கைக்கு திரும்பும் பாதை





























Comments