அகத்தீ
Home Engineers அகத்தி ஒன்று கூடல் சந்திப்பு அப்படின்னு பாரதி தோழர் சொன்ன உடனே ஒரு சின்ன பதட்டம் இருந்தது. ஆனா ஞாயிற்றுக்கிழமை காலைல அதாவது ஏப்ரல் 16 அன்னைக்கு நம்ம தோழர்கள் எல்லாம் பார்த்த உடனே அந்த பதட்டம் கொஞ்சம் கம்மியாச்சு. ரேஷ்மா தோழரின் பாடல் இன்னும் மனச அமைதிபடுத்துச்சு.
இஸ்மாயில் தோழர் இந்த நாள முன்னெடுத்த உடனே மொத்த பதட்டமும் போயிடுச்சு. இஸ்மாயில் தோழரோட நம்பிக்கையான, ஆழமான, பொருத்தமான உரையாடல் அவர் செய்யும் செயல்கள் நம்ம ரொம்பவே ஊக்கப்படுத்தியது.
எவ்வளவு சமூக அக்கறை கொண்ட மனிதராக இருந்தால் இஸ்மாயில் தோழர் ரமலான் விரதத்தைக் கூட பொருட்படுத்தாம தண்ணீர் கூட விழுங்காமல் பேசிக்கொண்டே இருந்தார்.அவரின் முயற்சியின் பயனாக தோழர்கள் அனைவரும் நெகிழி குப்பைகளை.பொறுக்கினோம் காய்ந்த செடி மரங்களுக்கு தண்ணீர் ஊற்றினோம். பசுமை தொட்டியை சீராக்கினோம், மக்கிய குப்பைகளை ஒன்று சேர்த்தோம்.அடித்த வெயிலுக்கும் பார்த்த சின்ன வேலைக்கும் கோமதி தோழர் மோர் இதமாக தொண்டையில் இறங்கியது. நமது சிறார்கள் தங்கள் உலகத்தில் ஒருவரோடு ஒருவர் கூடிக் குலாவி சண்டையிட்டு, எங்களின் வேலைகளை பார்வையிட்டு, தங்கள் நேரத்தை மகிழ்ச்சியாக கழித்தார்கள். எப்பொழுதும் போல் potluck lunch அறுசுவை உணவானது. இந்த சிறார் களம் சிறாருக்காக தனிப்பட்ட எந்த முயற்சியும் எடுக்காமல் பெரியவர்களுக்கான களமாக அமைந்தது. இப்படியே ஒவ்வொரு சிறார் களம் நிகழ்வையும் எடுத்துச் செல்லலாம் என்பதே அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. இந்த அகத்திய இடத்தை ஒவ்வொரு நிகழ்வுக்கு முன்பும் பின்பும் மேம்படுத்த வேண்டும் என்ற உறுதி ஏற்றுக்கொண்டு அந்த நாளை நிறைவு செய்தோம் நன்றிஅகத்தி! சந்திப்போம் !!!இன்னும் உத்வேகத்துடன்!!!!! - தோழர் காஞ்சனா
தாம்பரம் பகுதியில் நடக்கும் நிகழ்வுகளில் பங்கெடுக்க ஆர்வம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் இணைப்பில் இணையவும்.
Comments
Post a Comment