Skip to main content

பாரதியின் 'காணி நிலம் வேண்டும்'

 "காணி நிலம் வேண்டும்.... !"

மகாகவி பாரதியாரின் கவிதையில் வரும் வரிகளின் அர்த்தங்களும், அந்த கனவும் இப்போதும் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. நம் ஒவ்வொருவரிடம் உள்ள அந்த தீரா கனவுக்கு ஒரு அழகான செயல் வடிவம் கொடுத்துள்ளார் நம் தாம்பரம் பகுதியை சார்ந்த முன்னாள் பள்ளிகூட தமிழ் ஆசிரியர் தோழர் வெஸ்லி. உத்திரமேரூர் வட்டம் வயலூர் கிராமத்தில் அமைந்துள்ள அவருடைய தோட்டத்திற்கு கடந்த திங்கட்கிழமை சென்று வந்தது மிகுந்த மன நிறைவை கொடுத்தது. ஏராளமான பழ மரங்கள், பன்னை குட்டை, தங்குவதற்கான குடில், காய்கறி செடிகள், புறா, நாட்டு கோழி, வான்கோழி, கின்னி கோழி போன்ற ஏராளமான பறவைகள் என்று ஒருங்கிணைந்த பன்னைக் கான முயற்சியில் உள்ளார், வாழ்த்துக்கள் தோழர்.
காணி நிலம் வேண்டும் - பராசக்தி
காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.
பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
தென்றல் வரவேணும்.
பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
............ பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.

















Comments