மலை ஏற்றமும் பாட்டு பயிற்சியும்
நேற்று காலை அகத்தி தோழர்களுடன் தாம்பரத்தில் உள்ள பச்சை மலைக்கு சென்று வந்தோம்.
_________
ஒவ்வொரு நொடியிலும் வாழ்வோம்
ஒவ்வொரு பொழுதிலும் வாழ்வோம்
உண்மையில் அழகினை காண்போம்
உன்னதம் இது என சொல்வோம்
(ஒவ்வொரு நொடியிலும்)
காடும் மலையும் கடலும் வானும் எல்லாம் நமக்கு சொந்தம்
கங்கை யமுனை காவிரி வைகை எல்லாம் நமக்கு பந்தம்
(ஒவ்வொரு நொடியிலும்)
ஒவ்வொரு ஒலியும் ஒவ்வொரு விதமாய் காதில் விழுவது இனிமை
ஒவ்வொரு ஒளியும் ஒவ்வொரு விதமாய் உயர்வது ஒருவித பெருமை
(ஒவ்வொரு நொடியிலும்)
பெண்ணின் மகிமை பேசும் போது மண்ணும் சிலிர்த்து நிமிரும்
தடைகள் உடைந்து நொறுங்கி விழுந்து மானுட ஆளுமை வெல்லும்
(ஒவ்வொரு நொடியிலும்)
மாற்றம் இல்லா வாழ்க்கை ஓர் நாள் தேங்கிய நீராய் நாறும்
மாறி மாறி மலரும் வாழ்க்கை மல்லிகை பூவாய் மனக்கும்
(ஒவ்வொரு நொடியிலும்)
ஆடலும் பாடலும் ஆயிரம் ஆயிரம் மனிதர்கள் தேடிய செல்வம்
ஆடியும் பாடியும் அன்பை வளர்ப்போம் அது தான் நமக்கு தெய்வம்
(ஒவ்வொரு நொடியிலும்)
அகத்தியக்ஷ நிகழ்வுகளில் ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இணையலாம்
Comments
Post a Comment