Skip to main content

அகத்தீ உரையாடல் - மாமழையும் அதன் தாக்கமும்

 

 அகத்தீ
09 / 12 / 23 அன்றுசனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு சிட்லபாக்கம் ஏரிக்கரையில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தோம்.
 
மழை மகிழ்ச்சியின் குறியீடு என்பது போய் அச்சத்தின் கவலையின் குறியீடாக நம்மை மாற்றி உள்ளது இந்த நகரமாயமாக்கள்.
 
இயல்பு நிலைக்கு நாம் அனைவரும் திரும்பி உள்ளோம் என்று நம்புகிறோம். நம்மில் யாருக்காவது ஏதாவது உதவிகள் வேண்டுமா ? நமது மனநலம் உடல்நலம் பற்றியும் மற்றும் இந்த மழையை எப்படி எதிர்கொண்டோம் என்பதை பற்றி பகிர்ந்து கொள்ளவது வரும் காலங்களில் கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையாகவும், ஒருங்கிணைப்புடனும் இருக்க உதவும் என்பதே கூட்டத்தின் நோக்கம்.
 
"கடந்த 2015 மழை வெள்ளத்தின் போது அப்பா அம்மா தான் அழைப்பு கொடுத்து விசாரிச்சாங்க... ஆனா அப்போ அவங்க எந்த உதவியும் செய்யுற இடத்துல இல்ல.... கடந்த டிசம்பர் 4 பெய்த மழையின் போது அகத்தி தோழமைகள் அழைப்பு கொடுத்து உதவிகள் செய்ய முன் வந்தாங்க.. நாம் ஒரு சமூகமாக இயங்க வேண்டியதின் அவசியத்தை இந்த மழை வெள்ளம் மீண்டும் மீண்டும் எனக்கு உணர்த்துவதாக இருந்து." என்று காஞ்சனா தோழர் பகிர்ந்து கொண்டார்.
 
இந்த முறை இணையதளம் மற்றும் தொலைதொடர்பும் முழுவதுமாக துண்டிக்கப்பட்டதற்கான காரணம் இயற்கை சீற்றம் என்று நம்மை நம்ப வைப்பதை ஒரு சந்தேகத்துடனும் எச்சரிக்கையுடனும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. கடந்த 2015ல் மிகப் பெரிய அளவுக்கு மக்களை மீட்டதிலும் நிவாரண வேலைகளை முடுக்கிவிட்டதிலும் சமூக வலைத்தளங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. முன்பின் தெரியாத மக்கள் தன்னார்வலராக முன்வந்து தானாக ஒருங்கிணைந்து ஒரு அரசு இயந்திரம் செய்ய வேண்டிய வேலைகளை விட சிறப்பாக செய்ததை இந்த அரசுகள் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. அரசு நிர்வாகம் இந்த மழை வெள்ளத்தை எதிர்கொள்ள முடியாமல் தோற்ற இடங்களை வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைப்பதிலேயே தான் கவனமாக இருந்தார்கள். 
 
மழையும், வெள்ளமும் கூட வந்து விட்டுப் போகும்... மழை வெள்ளத்தை விட ஆபத்தானவர்கள் இப்போது உள்ள அரசுகள். 
 
இயற்கையின் அன்பால் இணைவோம்.
9498488645














 
 
 
 
 
 
 
 
 
 

Comments