அகத்தீ- சிறார்களம்
"மாமா ஒரு உதவி "
" சொல்லுமா வர்ஷா என்னடா வேண்டும்"
" நானும் அச்சுவும் ஒரு நிகழ்ச்சி திட்டமிட்டு இருக்கோம் அதை நடத்த உங்க வீடு வேண்டும்"
"உங்களுக்கு இல்லாததா எடுத்துக்கோ டா"
யோசித்து சொல்வதற்கு கூட நேரம் எடுக்காமல் என்னையும் அறியாமல் சம்மதித்துவிட்டேன். அன்று நாங்கள் ஊரில் இருக்க மாட்டோம் என்பது பிறகு தான் நினைவுக்கு வந்தது.
அவர்களே சிந்தித்து நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டு, பங்கெடுக்கும் குழந்தைகளை உறுதிபடுத்தி, நிகழ்வு அன்று நினைவு படுத்தி, சிறப்பாக நடத்தி உள்ளனர். இப்படி சுயமாக செயல்பட கூடிய ஆற்றலை அவர்கள் பெறவே வேண்டினோம். நாங்கள் செய்வதை பார்த்து கொண்டிருந்தவர்கள் இப்போது அதை அவர்களே 11 வயதில் செய்ய முன்வருவது என்பது நாங்கள் கூட்டாக செய்து கொண்டிருக்கும் செயலுக்கு ஒரு நிறைவையும், நம்பிக்கையையும் கொடுக்கிறது.
வர்ஷாவும் அச்சுவும் பள்ளி கல்வியிலிருந்து விடுபட்டவர்கள் என்பது குறிப்பிடதக்கது. அவர்கள் விருப்பப்படும் போது பள்ளி கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த திறந்த பார்வையோடு இவர்கள் பெற்றோர்கள் இதை அணுகுகின்றனர். இன்றைய கல்வி முறை மீது ஏராளமான விமர்சனங்கள் இருந்தாலும், ஒவ்வோரு குழந்தையை பொறுத்தும், பெற்றோர்களின் புரிதல், ஈடுபாடு, சமூக, பொருளாதார நிலைமையை பொறுத்து இந்த கருத்து வேறுபடுகிறது.
கற்றல் என்பது சுதந்திரமாக பறப்பதாகும்.
Comments
Post a Comment