தகையில் தளம் வாசிப்பு வட்டம்
பொன் சிவா
11வது படிக்கும் பள்ளி மாணவன்
" 'ரஸ்கின் பாண்ட்' நூல்களை படித்துக் கொண்டிருந்த எனக்கு 9வது விடுமுறையின் போது வீட்டில் இருந்த லியோ டால்ஸ்டாயின் சிறுகதை தொகுப்பு என் கண்ணில் பட்டது. ஒவ்வொரு கதையாக படிக்கும் போது ஒரு சுவையான மிட்டாயை சாப்பிட்டது போலவும் இருந்து சாப்பிடாதது போலவும் இருந்தது மேலும் சாப்பிட வேண்டும் என்றும் இருந்தது. மிகவும் கலவையான ஒரு அனுபவத்தை அந்த நூல் கொடுத்தது. இதில் தொடங்கிய என்னுடைய வாசிப்பு பயணம் அரசியல், தத்துவம், வரலாறு என்று ஆழமான நூல்களை தேடி தேடி படிக்க தூண்டுகோலாக இருந்தது. ஆங்கிலத்தில் வாசிப்பதை விட தமிழ் என் மனதுக்கு நெருக்கமாக இருந்ததை உணர்ந்தேன். இதை பார்த்த என் அப்பா எனக்கு புத்தகங்களை மட்டும் வாசிப்பதற்கான கிண்டில் கருவியை வாங்கி கொடுத்தார். இதன் காரணமாக என் வாசிப்பு விரிவடைந்தது. விடுமுறை நாட்களில் பல நூற்றுக்கணக்கான பக்கங்கள் கொண்ட நூல்களை ஓரிரு நாட்களில் படிக்க எனக்கு உதவியாக இருந்தது என் ஆயா தான். அவர் சமைத்து போட சாப்பிடுவதும் படிப்புதுமாக மட்டுமே என் விடுமுறை நாட்கள் பயனுள்ளதாக சென்றது. இதன் காரணமாக மொபைல் மட்டும் வீடியோ விளையாட்டுகளில் இருந்த ஆர்வம் மங்கிப்போனது. இந்த வாசிப்பு எனக்கு புதிய வார்த்தைகளை அறிமுகம் செய்தது. இதன் காரணமாக கிடைத்த பரந்தப்பட்ட அறிவு என் பள்ளி பாட புத்தகங்களை என்னால் எளிமையாக படிக்க முடிந்தது. இந்த வாசிப்பு என்னை மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் மக்களின் உரிமை சார்ந்து செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது."
__________
'நெருஞ்சிகள்' - கு. சௌமியா
இன்றும் ஆணாதிக்க சமூகமாக நாம் வாழும் உலகம் இருக்கும்போது அதில் எதிர்நீச்சல் அடித்து பொதுவெளியில் மக்களுக்காக செயல்படுகிற சமகால பெண் செயல்பாட்டாளர்களை பற்றிய தொகுப்பு தான் இந்த நூல். இதன் படைப்பனுபவத்தை எழுத்தாளர் மிகவும் சுவாரசியத்தோடு பகிர்ந்து கொண்டார்.
வாசிப்பை சுவாசமாக மாற்றுவோம் !
Comments
Post a Comment